இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் பந்துவீச்சாளர் முகமது ஷமியின் முதல் கோச் யார் தெரியுமா ? – விவரம் இதோ

Shami
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 51 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 184 விக்கெட்டுகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 148 விக்கெட்டுகளையும், 12 டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். தான் அறிமுகமானதிலிருந்தே சிறப்பாக விளையாடி வரும் ஷமி காயத்தால் அவ்வப்போது அணிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து வருகிறார்.

Shami

- Advertisement -

தற்போது இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளங்கி வரும் ஷமி கடந்த 1990 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். தனது அதிவேக துல்லியமான பந்து வீச்சுக்கு பெயர்போன முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் முதன்மை வீரராக இடம்பெற்று மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார்.

நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கூட 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு சற்று ஆறுதலாக அமைந்த அவர் தான் முதலில் யாரிடம் பயிற்சி பெற்றார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முகமது ஷமி 15 வயது இருக்கும்போது பக்ருதீன் சித்திக் என்பவரிடம் பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஆனால் அதற்கு முன்னர் சிறுவயதிலிருந்தே தனது தந்தையிடமே அவர் பயிற்சியைப் பெற்றார்.

Shami

இதன் மூலம் முகமது ஷமியின் முதல் பயிற்சியாளர் அவர் தந்தை தான் என்று தெரிய வந்துள்ளது. உத்தரபிரதேச கிரிக்கெட் வாரியத்தால் இருந்து வந்தவர் என்பதால் அணியில் துவக்க காலத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது ஆனாலும் தனது இளம் வயது பயிற்சியாளரான பக்ருதீன் சித்திக் என்பவரின் ஆலோசனைப்படி மேற்கு வங்காள அணிக்காக விளையாடினார். பின்னர் அம்மாநில அணியில் இடம்பிடித்து ரஞ்சி கோப்பையில் மேற்கு வங்க அணிக்காக சிறப்பாக பந்து வீசினார்.

Shami-2

2013ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தேர்வான ஷமி 2013ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக இடம் பெற்ற அவர் அந்த தொடரில் 8 போட்டியில் பங்கேற்று 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி நடைபெற்று முடிந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பாக பந்துவீசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement