நேற்றைய போட்டி முடிந்ததும் ஹாஸ்பிடல் சென்ற 2 வங்கதேச வீரர்கள் – விவரம் இதோ

Ban-4
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பலத்த எதிர்ப்பார்ப்புடன் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி பங்களாதேஷ் அணியை விட 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி 59 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தில் அசத்தினர் குறிப்பாக ஷமியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பராக லிட்டன் தாஸ் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஷமியின் பந்துவீச்சில் ஹெல்மெட்டில் பலமாக தாக்கப்பட்டார்.

பின்னர் அதன் பிறகு சிறிது நேரம் தொடர்ந்து ஆடிய லிட்டன் தாஸ் அதன்பிறகு தனது ஆட்டத்தை தொடர இயலவில்லை எனவும் தனக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் அம்பயரிடம் தெரிவித்தார் எனவே அம்பயர் அவரை ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் அவரை வெளியேற்றி அவருக்கு பதிலாக மெஹ்தி ஹஸன் என்ற பங்களாதேஷ் வீரரை பேட்டிங் செய்ய அனுமதித்தனர்.

மீண்டும் அதே ஓவரில் மற்றொரு பேட்ஸ்மேனான நயீம் ஹசனை ஒரு அசுர பவுன்சர் மூலம் தாக்கினர் ஷமி அவரும் அந்த பவுன்சரில் அடி வாங்கிய அதிர்ச்சியிலேயே பேட்டிங் செய்து அவுட் ஆனார். பின்னர் நேற்று போட்டி முடிந்து இவர்கள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். மேலும் பீல்டிங் செய்யவே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement