பும்ராவை தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள மற்றொரு சீனியர் வீரர் – லிஸ்ட்ல இதை கவனிச்சீங்களா?

shami
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கும் இவ்வேளையில் நேற்று பிசிசிஐ இந்த தொடருக்கான இந்திய அணியை அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதில் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய தவறிய சில வீரர்களுக்கு வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.

ind

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருவதால் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியில் விளையாடிய முகமது ஷமி அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஓய்வில் இருந்தார். எனவே நிச்சயம் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

shami

ஆனால் இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் முகமது ஷமி ஓய்வில் இருக்கிறார் என்று பிசிசிஐ தகவலை வெளியிட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் இல்லாமல் இந்திய அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : வெ.இ தொடருக்கு பிட்டாக இருந்தும் ஒதுக்கப்பட்ட பாண்டியா? – பி.சி.சி.ஐ எடுத்த அதிரடி முடிவு

இருப்பினும் அணியில் முகமது சிராஜ், தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் போன்ற திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்த தொடரில் அவர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement