முகமது ஷமியும், சவுதாம்ப்டன் மைதானமும் ஓர் பார்வை – விக்கெட்டை அள்ள இந்த ராசிதான் காரணமா ?

shami
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 ரன்களை குவிக்க மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது. நியூசிலாந்து அணி வீரர்களின் சிறப்பான பேட்டிங்கால் எவ்வாறு அவர்களது விக்கெட்டை வீழ்த்த போகிறார்கள் என்ற கேள்வி இருந்தது.

taylor

- Advertisement -

இந்நிலையில் ஐந்தாவது நாளான இன்று துவக்கத்திலேயே நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக முகமது ஷமி சிறப்பாக பந்து வீசினார். ஆரம்பத்திலிருந்தே அனல் பறந்த அவரது பந்து வீச்சில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் திக்கு முக்காடினார்கள். குறிப்பாக 5 ஆவது நாளில் முதல் விக்கெட்டாக ராஸ் டைலர் 11 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து வாட்லிங், கிரான்ட்ஹோம், ஜேமிசன் என அடுத்தடுத்து நியூசிலாந்து வீரர்களை வரிசைகட்டி பெவிலியனுக்கு அனுப்பினார். இந்த போட்டியின் முடிவில் 26 ஓவர்களை வீசி இருந்த அவர் 8 மெய்டன்களுடன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் தற்போது முகமது ஷமியின் இந்த சிறப்பான பவுலிங்கிற்க்கும் இந்த மைதானத்திற்கு இடையே உள்ள ராசி குறித்துதான் தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

shami-1

அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் இந்த சவுத்தாம்ப்டன் மைதானத்தில்தான் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதனைத் தொடர்ந்து அதே நாளில் இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று அவருக்கு நான்கு விக்கெட்டுகள் கிடைத்துள்ளது.

shami 2

இதுகுறித்த புள்ளி விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய நாள் ஆரம்பத்திலிருந்தே அற்புதமாக பந்துவீசிய ஷமி நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தனது துல்லியமான பந்து வீச்சின் மூலம் சிரமத்தை அளித்துக்கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement