வங்கதேச அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷாகிப் அல் ஹசன் – கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வ அறிவிப்பு

Shakib-2
- Advertisement -

வங்கதேச அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான பங்களாதேஷ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்டு தயாராகி வரும் வேளையில் அந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் 15-ஆம் தேதி துவங்கும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அதிகாரபூர்வமாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Shakib-3

- Advertisement -

ஏற்கனவே தேசிய அணிக்காக உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்க வேண்டும் என்று கிரிக்கெட்டி வாரியம் அவருக்கு நெருக்கடி கொடுத்ததன் காரணமாக இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை தவறவிட்ட அவர் அதன் பின்பு தனிப்பட்ட ஓய்வு வேண்டும் என்ற காரணத்தினால் அமெரிக்க நாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஷாகிப் அல் ஹசனுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்ற போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

Shakib

எனவே எதிர்வரும் 15-ஆம் தேதி தொடங்கும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அவருக்கு அடுத்தடுத்து கொரோனா பரிசோதனை நடைபெறும் என்றும் அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அப்படி நெகட்டிவ் ரிசல்ட் வரவில்லை என்றால் அவர் இந்த இலங்கை அணிக்கெதிரான தொடரில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஓராண்டாக தடை செய்யப்பட்டிருந்த ஷாகிப் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிய நிலையில் அடுத்தடுத்து பல பிரச்சினைகளால் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்து வருகிறார்.

இதையும் படிங்க : சான்ஸ் போதும் ! நட்சத்திர மும்பை வீரரால் அதிருப்தி, இளம் வீரருக்கு வாய்ப்பு கோரும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

35 வயதான ஷாகிப் அல் ஹசன் 2007ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement