- Advertisement -
உலக கிரிக்கெட்

WI vs BAN : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை எட்டி பிடித்த – ஷாகிப் அல் ஹசன்

உலகக் கோப்பை தொடரின் 23 வது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், மோர்தாசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹோப் 96 ரன்களும், லீவிஸ் 70 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 124 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த போட்டியில் 8 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 124 ரன்களையும் அடித்த சாகிப் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி அவர்படைத்த மிகப்பெரிய உலகசாதனை யாதெனில் மிகக்குறைந்த போட்டிகளில் அதாவது 202 போட்டிகளில் 6000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இந்த போட்டியில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது சாகிப் 6000 ரன்களை கடந்தார். மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து நான்கு முறை 50+ ரன்களையும் சாகிப் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by