IND vs BAN : இந்தியாவுக்கு எதிரா எப்போ ஆடுனாலும் இதுதான் நடக்குது – ஷாகிப் அல் ஹசன் வருத்தம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி நேற்று அடிலெயிடு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக விராட் கோலி 64 ரன்களும், கே.எல் ராகுல் 50 ரன்களும் குவித்தனர்.

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

- Advertisement -

பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 60 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில் பங்கதேச அணி இலக்கை நோக்கி வேகமாக பயணித்த வேளையில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் மழை காரணமாக போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட வேளையில் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு வங்கதேச கிரிக்கெட் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதையும் விடாமல் துரத்திய வங்கதேச அணியானது 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து வெறும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் :

Litton-das

இந்திய அணிக்கு எதிராக நாங்கள் எப்போது விளையாடினாலும் இதே தொடர் கதையாக போகிறது. நாங்கள் வெற்றிக்கு மிக மிக அருகில் வருகிறோம். ஆனால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்திய அணிக்கு எதிராக எப்போது விளையாடினாலும் இதேதான் நடந்து வருகிறது. இந்த போட்டியை இரு அணிகளுமே மிக ரசித்து விளையாடினோம். இது ஒரு சிறப்பான போட்டி, இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

- Advertisement -

முடிவில் எந்த ஒரு போட்டியிலுமே ஒரு அணி வெற்றி பெற வேண்டும். மற்றொரு அணி தோல்வி அடைய வேண்டும். அந்த வகையில் நாங்கள் இந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் சிறப்பாக போராடியதாக நினைக்கிறேன். லிட்டன் தாஸ் இன்று மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரே எங்களது சேசிங்கிற்கு பலம் சேர்த்தார். அதோடு இலக்கை வெற்றிகரமாக துரத்த முடியும் என்ற நம்பிக்கையையும் அளித்தார்.

இதையும் படிங்க : IND vs BAN : கொஞ்சம் பயமாவும், பதட்டமாவும் தான் இருந்தது. பங்களாதேஷ் அணிக்கெதிரான வெற்றி குறித்து – ரோஹித் சர்மா

ஆனால் இறுதியில் நாங்கள் இலக்கினை எட்ட முடியாமல் போனது வருத்தம் தான். இன்னும் இந்த தொடரில் ஒரு போட்டி எங்களுக்கு எஞ்சியிருக்கிறது. அந்த போட்டியிலும் சிறப்பாக விளையாட முயற்சிப்போம் என ஷாகிப் அல் ஹசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement