நான் டீம்ல இல்லாமலே பங்களாதேஷ் அணி சாதிச்சிட்டாங்க. ரொம்ப ஹேப்பி – ஷாகிப் அல் ஹசன் மகிழ்ச்சி

Shakib-3
Advertisement

மொமினுள் ஹாக் தலைமையிலான பங்களாதேஷ் அணி தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஜனவரி 1-ஆம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி அவர்களது மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது.

nzvsban

அவர்களது இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. ஏனெனில் டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணியை அவர்களது மண்ணிலேயே வைத்து பங்களாதேஷ் அணி வீழ்த்தியதால் இந்த வெற்றி கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பங்களாதேஷ் அணி பெற்ற இந்த வெற்றி குறித்து தனது கருத்தை அளித்துள்ள பங்களாதேஷ் அணியின் சீனியர் வீரரான ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் :

- Advertisement -

எனக்கு இந்த வெற்றியை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் தற்போது நான் அணியில் இல்லாமல் இருந்தும் இந்த போட்டியை எங்களது அணி வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு வீரர்கள் ஒவ்வொருவரும் தகுதியானவர்கள். சீனியர் வீரர்கள் பலர் இருந்தாலும் தற்போது உள்ள இளம் வீரர்களைக் கொண்ட அணி தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.

ban

அந்த வகையில் நியூசிலாந்து மண்ணில் கிடைத்த இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாங்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த 2022ஆம் ஆண்டு நம்பமுடியாத அளவில் துவங்கியுள்ளது. இந்த வெற்றியை தந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நியூசிலாந்து போன்ற கடினமான மண்ணில் கூட அந்த சூழ்நிலையை புரிந்துகொண்டு எங்கள் அணி விளையாடிய விதம் பாராட்ட வேண்டிய ஒன்று.

இதையும் படிங்க : காயமடைந்த முகமது சிராஜிக்கு பதிலாக 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடப்போவது யார்? – விவரம் இதோ

டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை நான் பார்க்கிறேன் என வெற்றி குறித்து ஷாகிப் அல் ஹசன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement