இந்தியாவை பாத்தாலே புலி மாதிரி மாறிடுறாரு. தனி ஆளாக இந்திய அணியை கலங்கவிட்ட – வங்கதேச வீரர்

Mehidy
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று டிசம்பர் நான்காம் தேதி டாக்கா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

INd vs Ban Shreyas Iyer Ebodad Hussain

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது வங்கதேச வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 73 ரன்களை குவித்தார்.

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் பங்களாதேஷ் அணியானது மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாகிப் அல் ஹசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Shakib Al Hasan 1

ஏனெனில் எப்போதுமே இந்திய அணிக்கு எதிராக அசத்தலாக செயல்படும் ஷாகிப் அல் ஹசன் இன்றைய போட்டியிலும் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 2 மெயிடன் ஓவர்களுடன் 36 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரின் சிறப்பான பந்துவீச்சில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் காலியானது.

- Advertisement -

அதேபோன்று பந்துவீச்சில் மட்டும் நிற்காமல் பேட்டிங்கில் நான்காவது வீரராக களமிறங்கிய அவர் 38 பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்து தனது மிகச் சிறப்பான பங்களிப்பை பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு வழங்கினார்.

இதையும் படிங்க : 2023இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக பிரகாசமான வாய்ப்புள்ள 5 தரமான இந்திய வீரர்கள்

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கான ஆட்ட நாயகனாக ஷாகிப் அல் ஹசனே இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அனுபவ வீரரும், முன்னாள் கேப்டனுமான ஷாகிப் அல் ஹசன் கடந்த பல ஆண்டுகளாக வங்கதேச அணியின் முக்கிய வீரராக பார்க்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement