அவமானமா இல்லையா? நீங்க கில்கிறிஸ்ட், ஹைடன் கிடையாது.. பேசாம ரிட்டையராகிடுங்க.. வங்கதேச வீரரை விளாசிய சேவாக்

VirenderSehwag
- Advertisement -

ஐசிசி டி20உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 10ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வியை சந்தித்தது. நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா வெறும் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் பேட்டிங்கில் தென்னாப்பிரிக்காவை விட மோசமாக விளையாடிய வங்கதேசம் 20 ஓவரில் முழுமூச்சுடன் போராடியும் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய், 37 முகமதுல்லா 20 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதனால் டி20 உலகக் கோப்பையில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி தென்னாப்பிரிக்கா உலகக் சாதனை படைத்தது. இந்நிலையில் அப்போட்டியில் ஒரு சீனியர் வீரரான சாகிப் அல் ஹசன் தன்னுடைய தரத்திற்கு நிகராக விளையாடவில்லை என்று வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

சேவாக் விளாசல்:
மாறாக ஆடம் கில்கிறிஸ்ட், மேத்தியூ ஹைடன் போல விளையாடி விக்கெட்டை பரிசளித்த ஷாகிப் டி20 கிரிக்கெட்டுக்கு பொருத்தமற்றவர் என்றும் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். எனவே ஷாகிப் ஓய்வு பெற வேண்டும் என்று வெளிப்படையாக கூறும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“இந்த உலகக் கோப்பை அணியில் அனுபவத்திற்காக ஷாகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதை நம்மால் பார்க்க முடியவில்லை. அனுபவம் கொண்ட நீங்கள் குறைந்தபட்சம் களத்தில் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும். நீங்கள் ஷார்ட் பந்தில் ஃபுல் ஷாட் அடிக்க ஹைடன் அல்லது கிலகிறிஸ்ட் கிடையாது. நீங்கள் வெறும் வங்கதேச வீரர். உங்களுடைய தகுதிக்கு தகுந்தார் போல் விளையாடுங்கள்”

- Advertisement -

“ஹூக் அல்லது புல் ஷாட் அடிக்கத் தெரியவில்லை என்றால் உங்களுக்கு தெரிந்த ஷாட்டுகளை அடியுங்கள். டி20 கிரிக்கெட்டில் ஷாகிப்பின் நேரம் நீண்ட காலத்திற்கு முன்பாகவே முடிந்ததாக நான் கருதுகிறேன். கடந்த டி20 உலகக் கோப்பையுடன் அவருடைய நேரம் முடிந்து விட்டது. நீண்ட காலம் கேப்டனாக இருந்த அவர் தன்னுடைய டி20 புள்ளி விவரங்களை பார்த்து அவமானமாக உணரவில்லையா?”

இதையும் படிங்க: சூப்பர் 8க்குள் இதை செய்யலன்னா ஆபத்து இந்தியாவுக்கு தான்.. ரோஹித் சர்மாவை எச்சரிக்கும் புள்ளிவிவரம்

“டி20 கிரிக்கெட்டில் இனிமேலும் அசத்த முடியாது என்பதை உணர்ந்து அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற 2012 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக நான் விளையாடிய போது ஸ்டைன், மோர்கேல் போன்ற பவுலர்களை என்னால் அடிக்க முடியவில்லை என்று உணர்ந்தேன். எனவே நேரடியாக தேர்வுக் குழுவினரிடம் என்னை டி20 கிரிக்கெட்டில் தேர்வு செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டேன். ஏனெனில் அணிக்காக பங்காற்ற முடியாத போது நீங்கள் விளையாடுவதில் என்ன பயன்? எனவே அவர் இனிமேலும் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை” எனக் கூறினார்.

Advertisement