குடும்பத்தில் நிகழ்ந்த சோகம் – பாதியில் தாய்நாடு திரும்பும் பிரபல கிரிக்கெட் வீரர் – என்ன நடந்தது?

Ban
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த மார்ச் 18-ஆம் தேதியன்று சென்சூரியனில் துவங்கியது. அந்த முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய வங்கதேசம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு ஷாக் கொடுத்தது. அந்த வெற்றியின் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்த வங்கதேசம் சரித்திர சாதனை படைத்தது.

Ban-2

- Advertisement -

விறுவிறுக்கும் ஒருநாள் தொடர்:
அந்த போட்டியில் வெறும் 64 பந்துகளில் 77 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்ட வங்கதேசத்தின் நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 20-ஆம் தேதி நடந்த 2-வது போட்டியில் சுதாரித்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பதிவு செய்து வங்கதேசத்திற்கு தக்க பதிலடி கொடுத்தது.

இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதையடுத்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 23-ஆம் தேதி செஞ்சூரியனில் நடைபெற உள்ளது.

ban vs rsa

சாகிப் அல் ஹசன் குடும்பத்தில் சோகம்:
அந்த போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றிலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு கிரிக்கெட் தொடரை வென்று சரித்திரம் படைக்க வங்கதேசம் தயாராகி வருகிறது. இந்நிலையில் வங்கதேசத்தின் நட்சத்திர வீரர் மற்றும் ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசனின் தாய், குழந்தை போன்ற ஒரு சில நபர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென ஏற்பட்ட அந்த உடல்நலக்குறைவு காரணமாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரை பாதியிலேயே ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக தாய் நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து விளையாடும் சாகிப்:
இந்த செய்தி வங்கதேச கிரிக்கெட் வட்டாரம் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு மகத்தான வீரர் இருந்தால் மட்டுமே 3-வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியால் சரித்திர வெற்றியை பதிவு செய்ய போராட முடியும். இருப்பினும் இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் அவர் தனது குடும்பத்தினரை பார்க்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததாக தெரிகிறது.

- Advertisement -

ஆனால் தனது தாய் நாட்டுக்காக நாளை மறுநாள் நடைபெறும் முக்கியமான 3-வது போட்டியில் பங்கேற்று விட்டு அதன்பின் தாயகம் திரும்பலாம் என சாகிப் முடிவெடுத்துள்ளார். இது பற்றி வங்கதேச அணியின் இயக்குனர் கலில் முகமது பேசியது பின்வருமாறு.

“அவரின் குடும்பத்தில் இருப்பவர்கள் திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதனால் டாக்காவுக்கு வந்து நேரில் வந்து பார்க்க வேண்டுமா என்று அவர் அவர்களிடம் போனில் நலம் விசாரித்தார். அந்த சமயத்தில் நாங்கள் அவர் நாடு திரும்புவதற்காக விமான டிக்கெட்டுகளை புக் செய்துள்ளோம். ஆனால் உடனடியாக தாயகம் திரும்பும் முடிவை தவிர்த்துள்ள ஷாகிப் அல் ஹசன் ஒருநாள் தொடருக்கு பின்புதான் நாடு திரும்புகிறார்.

- Advertisement -

எனவே கண்டிப்பாக 3-வது போட்டியில் விளையாடுவார்” என கூறினார். இதன் காரணமாக அதன்பின் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக ஏற்கனவே மோசமான மன நிலைமை காரணமாக இந்த தென்ஆப்ரிக்க தொடரில் பங்கேற்க விரும்பவில்லை என ஷாகிப் அல் ஹசன் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவே ஐபிஎல் தொடராக இருந்திருந்தால் விளையாடி இருப்பீர்கள் என்பது போன்ற பல விமர்சனங்கள் அவர் மீது எழுந்த காரணத்தால் வேறு வழியின்றி தென் ஆப்ரிக்க தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க : மேட்ச் டிரா ஆனாலும் வரலாற்றில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் – பிரமிக்க வைத்த இமாலய சாதனை

அப்படிப்பட்ட நிலைமையில் தனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மோசமான உடல்நிலை அவரின் மனநிலையை மேலும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எது எப்படி இருந்தாலும் ஷாகிப் அல் ஹசன் மற்றும் அவரின் குடும்பம் விரைவில் குணமடைய வேண்டுமென வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Advertisement