மேட்ச் டிரா ஆனாலும் வரலாற்றில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் – பிரமிக்க வைத்த இமாலய சாதனை

Brathwaite
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது தற்போது அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த தொடரில் ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்த வேளையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 14-ஆம் தேதி துவங்கி நேற்று 20-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 507 ரன்களை குவிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 411 ரன்களை குவித்தது.

Brathwaite 2

- Advertisement -

அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி 185 ரன்கள் எடுத்து இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்த வேளையில் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 135 ரன்கள் எடுத்திருந்தபோது ஐந்தாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

இந்தப் போட்டி டிராவில் முடிந்தது பெரிய விடயம் கிடையாது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகழ்த்திய ஒரு சாதனையை தற்போது வரலாற்றில் இடம்பெறச் செய்யும் அளவிற்கு சிறப்பான ஒன்றாக மாறியுள்ளது. கிரிக்கெட்டில் உண்மையான வடிவம் என்றாலே டெஸ்ட் கிரிக்கெட் தான் என்று பல்வேறு ஜாம்பவான்களும் கூறியதை நாம் கண்டிருப்போம்.

test

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒரு கிரிக்கெட் வீரரின் முழுமையான திறனும் வெளிவரும் என்பது உண்மைதான். ஏனெனில் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் வீரர்களின் அனைத்து திறமைகளும் வெளிவரும். அந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த டாப் 15 வீரர்களில் தற்போது 14-வது இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் துவக்க வீரர் பிராத்வொயிட் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் முதல் இன்னிங்சில் போது 489 பந்துகளை எதிர்கொண்டு 160 ரன்களை குவித்தார். அதே போன்று இரண்டாவது இன்னிங்சில் 184 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் குவித்தார். இப்படி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இவர் 673 பந்துகளை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : வயது வெறும் நம்பர் – ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் சதம் விளாசிய டாப் 5 நட்சத்திரங்கள் – லிஸ்ட் இதோ

அதோடு வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் சார்பாக அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரராகவும் இவர் தனது பெயரை பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 15 பேர் பட்டியலில் இந்திய வீரரான விஜய் ஹசாரே 675 பந்துகளை எதிர்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement