பிளே ஆப் போட்டிகளில் இருந்து வெளியேறிய முக்கிய வீரர் – கொல்கத்தா அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

KKR
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று முதலாவது குவாலிபயர் போட்டியில் மோத இருக்கிறது. அதனை தொடர்ந்து 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ள பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோத இருக்கின்றனர்.

எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபயர் முதல் போட்டியில் தோல்வி அடையும் அணியுடன் குவாலிபயர் 2-ஆவது போட்டியில் மோதும். இந்நிலையில் இந்த தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் அணியிலிருந்து விலக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே கொல்கத்தா அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ரசலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாட முடியாத நிலையில் ஷகிப் அல் ஹசன் அவரது இடத்தில் இறங்கி சிறப்பாக விளையாடி வந்தார்.

Shakib

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க உள்ளதால் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற வங்கதேச வீரர்கள் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட அந்நாட்டு வீரர்களுக்கு நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தற்போது அவர் கொல்கத்தா அணியில் இருந்து விலகி ஓமன் நாட்டிற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : 153 கி.மீ வேகத்தில் பந்துவீசிய உம்ரான் மாலிக்குக்கு அடித்த அதிர்ஷ்டம் – பி.சி.சி.ஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் வங்கதேச அணிக்கு 2 வாரம் அப் போட்டிகள் இருப்பதால் இனி வரும் போட்டிகளில் ஷாகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என்று தெளிவாகியுள்ளது. இதன் காரணமாக கொல்கத்தா அணி அவருக்கு பதில் எந்த வீரரை எடுத்து விளையாடப் போகிறது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement