153 கி.மீ வேகத்தில் பந்துவீசிய உம்ரான் மாலிக்குக்கு அடித்த அதிர்ஷ்டம் – பி.சி.சி.ஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Umran-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளனர். அந்தவகையில் சன்ரைசர்ஸ் அணியில் தமிழக வீரர் நடராஜன் பதிலாக அறிமுகமாகிய ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 21 வயதான உம்ரான் மாலிக் ரசிகர்களின் கவனத்தை மட்டுமின்றி இந்திய அணியின் நிர்வாகத்தின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளார் என்றே கூறலாம். ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தி இருந்தாலும் தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துகளை பறக்கவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

umran 2

- Advertisement -

இவரது புல்லட் வேக பந்துவீச்சை கண்டு வியந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் உம்ரான் மாலிக்கை தனியாக கவனம் செலுத்தி அவரின் திறமையை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படி இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் அதுவும் 21 வயதில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதை பார்த்த ரசிகர்களுக்கும் அவர்மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியதை கண்ட நம் ரசிகர்களுக்கு இந்திய வீரர் ஒருவரும் இவ்வாறு பந்து வீசுவதை பார்த்ததும் பெரிதளவு பாராட்டி வருகின்றனர். உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் சன் ரைசர்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்தார். பின்னர் நடராஜனுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அணியில் இடம் பிடித்திருந்தார்.

umran

இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த அவர் 153 கி.மீ வேகத்தில் பந்து வீசி இந்த ஐபிஎல் தொடரில் அதிவேக பந்தினை வீசிய பவுலர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். இந்நிலையில் அவரின் இந்த அபார திறமை பார்த்த இந்திய அணி நிர்வாகம் அவருக்கு தற்போது அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

- Advertisement -

umran

அதன்படி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் தவிர மற்ற அணிகளின் வீரர்கள் நாடு திரும்பிய வேளையில் உம்ரான் மாலிக் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் நெட் பவுலராக அவர் தேர்வு செய்யப்பட்டு இந்திய வீரர்களுக்கு பயிற்சியின் போது பந்து வீசுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நீங்கள் எனக்கு அளித்த அன்புக்கு நன்றி. ரசிகர்களுக்கான மெசேஜ்ஜை கொடுத்து விடைபெற்ற – டேவிட் வார்னர்

21 வயதான அவர் நிறைய போட்டிகளில் பங்கேற்று விளையாட வில்லை என்றாலும் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி தற்போது இந்திய அணியின் நெட் பவுலராகவும் தேர்வாகியுள்ளார். அவரின் திறமை நாளுக்கு நாள் முன்னேறும் பட்சத்தில் நிச்சயம் அவர் விரைவில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement