- Advertisement -
உலக கிரிக்கெட்

ஷாகிப் அல் ஹசன் மீது பாய்ந்த வழக்கு.. 147 கொண்ட குழுவில் 28 ஆவது குற்றவாளியாக அவரது பெயரும் சேர்ப்பு – என்ன நடந்தது?

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அண்மையில் நடைபெற்ற ஒரு மிகப்பெரிய வன்முறையில் சுமார் 50-0க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வங்கதேச நாட்டில் ஒரு கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் இந்த வன்முறையில் பல்வேறு பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசினா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

வங்கதேசத்தில் வன்முறை :

அதனை அடுத்து அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கதேச பிரதமரான ஷேக் ஹசினா உடன் சேர்ந்து அவர்களது கட்சி நிர்வாகத்தினர் மீதும் கொலை முயற்சி மற்றும் சதி திட்டம் ஆகியவை நடைபெற்றதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

இதில் அதிர்ச்சியான தகவல் யாதனில் வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன் பெயரும் அந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரராக இருப்பது மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்த ஷாகிப் அல் ஹசனும் ஷேக் ஹசினா உடன் சேர்த்து 147 பேர் கொண்ட குற்றவாளிகள் பட்டியலில் 28-வது குற்றவாளியாக அவர்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நடைபெற்று வரும் இந்த வன்முறையில் அவர்கள் தலைமையிலான நிர்வாகமே அனைத்து குற்றங்களையும் செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் என்பதை தவிர கலைக்கப்பட்ட ஆட்சியின் நிர்வாகியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள அவர் மீது தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஒருநாள் வாழ்ந்தாலும் அவர் மாதிரி வாழனும்.. தோனியின் மீது அன்பை பொழிந்த நியூசிலாந்து வீரர் – விவரம் இதோ

இது குறித்து வெளியான தகவலின் படி ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற இந்த வன்முறையில் ஷாகிப் அல் ஹசன் மறைமுகமாக பங்களிப்பை வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்த விசாரணையும் விரைவில் முறைப்படி நடைபெற உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -