சர்வதேச டி20 : லாசித் மலிங்காவின் இமாலய சாதனையை முறியடித்த ஷாகிப் அல் ஹசன் – விவரம் இதோ

Shakib-2
Advertisement

வங்கதேச அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் 2007 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி நேற்று துவங்கிய டி20 உலக கோப்பை தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக வங்கதேச அணி விளையாடியபோது ஷாகிப் அல் ஹசன் சர்வதேச டி20 போட்டிகளில் மலிங்காவின் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளார்.

Shakib-3

அந்த சாதனை யாதெனில் இதுவரை டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக மலிங்க இருந்து வந்தார். மொத்தம் 84 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா 107 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதனை தற்போது நேற்று நேற்று அவர் விளையாடிய 89-ஆவது டி20 போட்டியில் முறியடித்துள்ளார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் 2 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 89 டி20 போட்டிகளில் விளையாடி 108 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் வேறு யாரும் படைக்காத ஒரு சாதனையையும் அவர் தன் வசம் வைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் டி20 கிரிக்கெட்டில் முதலாவது வீரராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமின்றி ஆயிரம் ரன்களையும் அவர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

shakib 1

இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 1763 ரன்களை அடித்துள்ள அவர் 108 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி சிறப்பாக பந்துவீசிய அவர்கள் ஒரு கட்டத்தில் 70 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். ஆனால் பின் சுதாரித்து விளையாடிய ஸ்காட்லாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் 140 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க : சி.எஸ்.கே கோப்பையை கைப்பற்றியதால் பொல்லார்ட்டின் சாதனையை முறியடித்த பிராவோ – விவரம் இதோ

பின்னர் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது ஸ்காட்லாந்து வீரர்களின் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement