சி.எஸ்.கே கோப்பையை கைப்பற்றியதால் பொல்லார்ட்டின் சாதனையை முறியடித்த பிராவோ – விவரம் இதோ

Bravo

இந்தியாவில் ஐபிஎல் டி20 தொடர் நடைபெறுவதைப் போல உலகெங்கிலும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக், தென்னாபிரிக்க சூப்பர் லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், வெஸ்ட் இண்டீஸ்ஸில் கரீபியன் லீக், வங்கதேசத்தில் வங்கதேச பிரீமியர் லீக், இலங்கையில் லங்கா பிரீமியர் லீக், கனடா டி20 லீக் என உலகெங்கிலும் பல்வேறு வகையான டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்திய வீரர்கள் மற்ற நாட்டில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட முடியாது என்கிற காரணத்தினால் இந்திய வீரர்கள் ஐபிஎல்-லில் மட்டுமே ஆடி வருகின்றனர். ஆனால் மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அனைத்து டி20 தொடர்களிலும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக உலகின் எந்த மூலையில் டி20 தொடர் நடைபெற்றாலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு என்று ஒரு தனி மவுசு உள்ளது. அதிலும் குறிப்பாக மேட்ச் வின்னர்களான பிராவோ மற்றும் பொல்லார்டு ஆகிய இருவரும் உலகெங்கிலும் உள்ள அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர்.

dwayne-bravo-kieron-pollard

டி20 கிரிக்கெட்டில் மாபெரும் அனுபவம் கொண்ட இவர்கள் இருவரும் பல முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுடன் இருந்துள்ளனர். அதன்படி பொல்லார்டு இதுவரை 15 முறை t20 சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இருந்துள்ளார். அதேபோன்று இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் பிராவோவும் 15 டி0 லீக் தொடர்களில் சாம்பியனான அணியில் இடம்பெற்றிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக ராகுல் சாஹரை தேர்வுசெய்ய காரணம் இதுதான் – உண்மையை சொன்ன கோலி

இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் நான்காவது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது பிராவோவுக்கு 16-ஆவது சாம்பியன் பட்டமாக அமைந்தது. இதன் மூலம் அதிக டி20 லீக்கில் வெற்றி பெற்ற அணியில் இருந்த வீரர் என்ற சாதனையை பிராவோ பொல்லார்ட்டிடம் இருந்து பறித்து தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement