யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக ராகுல் சாஹரை தேர்வுசெய்ய காரணம் இதுதான் – உண்மையை சொன்ன கோலி

chahar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி இன்று துவங்கிய டி20 உலகக்கோப்பை தொடரானது அடுத்த மாதம் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஐபிஎல் தொடரை முடித்து தற்போது தயாராக உள்ள நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி குறித்து கேப்டன் விராட் கோலியிடம் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சில கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கான பதில்களையும் கேப்டன் கோலி விளக்கமாக அளித்திருந்தார்.

- Advertisement -

அதில் முக்கிய கேள்வியாக அனைவராலும் பார்க்கப்பட்டது யாதெனில் அனுபவ வீரர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக ராகுல் சாஹர் ஏன் அணியில் எடுத்தீர்கள் ? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கேப்டன் கோலி கூறுகையில் :சாஹலுக்கு பதிலாக ராகுல் சாஹரை அணியில் எடுத்தது ஒரு சவாலான முடிவுதான்.

இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ராகுல் சாஹர் சிறப்பாக பந்துவீசி உள்ளார். அதுமட்டுமின்றி நடைபெற்று முடிந்த இங்கிலாந்து மற்றும் இலங்கை தொடரில் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக பந்து வீச கூடியவர் அவர் என்பதனால் அதனை அவரை தேர்வு செய்துள்ளோம்.

chahar 1

அதுமட்டுமின்றி யுஸ்வேந்திர சாஹலை காட்டிலும் ராகுல் சாஹர் பந்துவீச்சில் சற்று வேகமும் அதிகமாக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆடுகளங்கள் மெதுவாக இருப்பதன் காரணமாக நிச்சயம் சுழற்பந்துவீச்சாளர் சற்று வேகமாக பந்துவீச வேண்டியது அவசியம் என்பதனால் அவரை நாங்கள் அணியில் தேர்வு செய்துள்ளோம் என்று தெளிவான பதில் வழங்கினார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியின் குணங்கள் அப்படியே இவரிடம் இருக்கு. எங்கயோ போக போறாரு – சுரேஷ் ரெய்னா பாராட்டு

மேலும் உலககோப்பை போன்ற முக்கியமான தொடரில் வீரர்களை தேர்வு செய்வது கடினம் என்றாலும் தேவைப்படும் போது இதுபோன்ற முடிவுகளை எடுப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார். இந்திய அணியானது 24ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடவுள்ளது. அதற்கு முன்னதாக 18ஆம் தேதி இங்கிலாந்து அணியுடனும், 20ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் பயிற்சிப் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement