- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நாங்க செய்ஞ்ச தப்பு தான் இந்த நிலைமைக்கு காரணம்.. தோல்விக்கு பிறகு – சாய் ஹோப் வருத்தம்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் முக்கிய போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது :

நாங்கள் செய்த இந்த தவறே தோல்விக்கு காரணம் : சாய் ஹோப்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 40 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 37 ரன்களையும் குவித்தனர். பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது :

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர் கொண்டு 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய அணியின் கேப்டன் சாய் ஹோப் கூறுகையில் :

நாங்கள் இந்த போட்டியில் இறுதி நேரத்தில் கூடுதலாக ரன் குவிக்க தவறிவிட்டோம். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் போன்ற சேசிங்கிற்கு சாதகமான மைதானத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரன் குவித்திருக்க வேண்டும். அதுதான் நாங்கள் செய்த தவறு. இந்த போட்டியின் ஆரம்பத்தில் நாங்கள் சிறப்பாக துவங்கவில்லை. ஆனால் மிடில் ஓவர்களின் போது சிறப்பாக பேட்டிங் செய்தோம். இறுதி நேரத்தில் அதிக ரன்களை குவிக்க தவறிவிட்டோம் .

- Advertisement -

இதையும் படிங்க : 100 போட்டியை வெளியில் இருந்து பாத்திருக்கிறேன்.. வெற்றிக்கு பிறகு எமோஷனலாக பேசிய – சஞ்சு சாம்சன்

190 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் எட்டக்கூடிய ஒன்றுதான். அதிலும் குறிப்பாக சஞ்சு சாம்சன் விளையாடிய விதம் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தே ஆக வேண்டும். இன்னும் இந்த போட்டியில் கொஞ்சம் கூடுதலாக ரன் குவித்திருந்தால் எங்களுக்கான வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும் என சாய் ஹோப் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -