வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் இந்திய அணி பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
என் வாழ்நாளில் மிகச்சிறந்த நாள் இன்று : சஞ்சு சாம்சன் உருக்கம்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 97 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய சஞ்சு சாம்சன் கூறுகையில் :
இந்த நாளுக்காக தான் நான் காத்திருந்தேன். இந்திய அணிக்காக நான் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய கனவு. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் கடந்த 10-12 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறேன். அதேபோன்று இந்திய அணிக்காகவும் 10 ஆண்டுகள் விளையாடி இருந்தாலும் நிறைய நாள் டக் அவுட்டில் அமர்ந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுவதை பார்த்திருக்கிறேன்.
இதையும் படிங்க : இத்தனை நாள் காத்திருப்புக்கு கிடைத்த பரிசு.. வெற்றிக்கு பின்னர் சஞ்சு சாம்சனை வாழ்த்திய – சூரியகுமார் யாதவ்
இந்திய அணிக்காக ஒரு 50-60 போட்டிகளில் நான் விளையாடி இருந்தாலும் 100 போட்டிகளில் வெளியிலிருந்து அவர்கள் எவ்வாறு போட்டியை முடித்துக் கொடுக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன். அந்த வகையில் போட்டியின் சூழ்நிலை கணித்து இந்த போட்டியின் இறுதிவரை சென்று வெற்றி பெற்று கொடுத்ததில் மகிழ்ச்சி. என்னுடைய வாழ்நாளிலேயே இது ஒரு சிறப்பான நாளாக கருதுகிறேன் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



