சர்வதேச ஒருநாள் போட்டியில் இதுவரை யாரும் படைக்காத சாதனையை நிகழ்த்திய – வெஸ்ட் இண்டீஸ் வீரர்

Shai-Hope
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி 311 ரன்களை குவித்தாலும் 312 ரன்கள் என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது கடைசி ஓவரில் இரண்டு பந்துகளை மீதம் வைத்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியானது ஜூலை 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

முதல் இரண்டு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு எதிராக மிக சவாலான ஆட்டத்தை வழங்கியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அனியானது 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்தது.

- Advertisement -

இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 300 ரன்களை கடக்க காரணமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் துவக்க வீரரான சாய் ஹோப் திகழ்ந்தார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஏனெனில் போட்டியின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பவுலர்களை லாவகமாக எதிர்கொண்ட அவர் 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

அதிலும் குறிப்பாக அவர் விளையாடிய இந்த நூறாவது போட்டியில் சதம் அடித்தது அவருக்கு பலரது பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக தற்போது வளர்ந்து நிற்கும் சாய் ஹோப் இந்த நூறாவது போட்டியில் சதம் அடித்தது மட்டுமின்றி இன்னும் ஒரு தனித்துவமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறி உள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள வீரர்கள் யாரும் தாங்கள் விளையாடிய ஐம்பதாவது மற்றும் நூறாவது போட்டியில் சதம் விளாசியது கிடையாது. ஆனால் சாய் ஹோப் தனது நூறாவது போட்டியில் அடித்த சதத்தின் மூலம் அந்த சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : 10 ரன் மட்டுமே அடிச்ச ஆவேஷ் கானை போட்டிக்கு பின்னர் புகழ்ந்து பேசிய தவான் – ஏன் தெரியுமா?

ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிராக தனது ஐம்பதாவது ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த சாய் ஹோப் 170 ரன்கள் அடித்த வேளையில், நூறாவது ஒருநாள் போட்டியிலும் 115 ரன்கள் குவித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50-வது மற்றும் நூறாவது போட்டிகளில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனையை ஒருநாள் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement