10 ரன் மட்டுமே அடிச்ச ஆவேஷ் கானை போட்டிக்கு பின்னர் புகழ்ந்து பேசிய தவான் – ஏன் தெரியுமா?

Dhawan-and-Avesh
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 312 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய வேளையில் போட்டியின் கடைசி ஓவரில் 8 விக்கெட் இழந்து 312 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு திரில்லிங்கான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலமாக தற்போது மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

Axar Patel

- Advertisement -

இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 312 ரன்கள் என்கிற இலக்கை துரத்தியபோது இந்திய அணி சார்பாக ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் அரை சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். அதிலும் குறிப்பாக அக்சர் பட்டேல் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்து 35 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனாலும் இந்த போட்டியில் 10 ரன்கள் மட்டுமே அடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கானை இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் போட்டியின் முடிவில் புகழ்ந்து பேசியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பந்துவீச்சில் 6 ஓவர்களை மட்டுமே வீசி 54 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமாக செயல்பட்ட ஆவேஷ் கான் பேட்டிங்கில் அக்சர் பட்டேலுடன் இணைந்து இறுதி நேரத்தில் 12 பந்துகளில் இரண்டு பவுண்டர்களுடன் 10 ரன்களை அடித்தார்.

Avesh Khan 1

இந்நிலையில் ஆவேஷ் கான் குறித்து பேசியிருந்த தவான் கூறுகையில் குறிப்பிட்டதாவது : இந்திய அணி இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக இறுதிவரை நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

- Advertisement -

அதேபோன்று ஆவேஷ் கானும் தனது அறிமுக போட்டியில் அவர் அடித்த இந்த 10 ரன்கள் என்பது வெற்றிக்கு முக்கியமான சமயத்தில் தேவையான நிலையில் வந்துள்ளது. அது பாராட்டத்தக்க வேண்டியது. ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களின் இந்த வளர்ச்சிக்கு ஐபிஎல்-க்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

இதையும் படிங்க : IND vs WI : அம்பயரால் மிஸ் பண்ணிட்டேன். கடைசி போட்டியில் கண்டிப்பா சதமடிப்பேன் – இளம் இந்திய வீரர் சவால்

ஏனெனில் ஐபிஎல் போன்ற பெரிய பிளாட்பார்மில் இருந்து தரமான வீரர்கள் கண்டறியப்படுவதால் அவர்களால் சர்வதேச போட்டியிலும் சிறப்பாக செயல்பட முடிகிறது என்று ஷிகார் தவான் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் மோசமாக ரன்களை வாரி வழங்கி சொதப்பி இருந்தாலும் போட்டியின் இறுதி நேரத்தில் அவர் அடித்த 10 ரன்களும் முக்கியமான ஒன்று என்பது சரியான விடயம் தான்.

Advertisement