120 ரன்ஸ்.. 6 விக்கெட்ஸ்.. ஏபிடி, டேல் ஸ்டைனை முந்திய ஹோப், சீல்ஸ்.. தோனிக்கு அடுத்து வரலாற்று சாதனை

WI Players
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் பாகிஸ்தானை 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றது. அதன் வாயிலாக 1991க்குப்பின் 34 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரை வென்று வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்தது.

- Advertisement -

தோனிக்கு அடுத்து ஹோப்:

மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய மிகப்பெரிய சாதனை வெற்றியை பெற்றது. இதற்கு முன் 2015ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 294/6 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் சாய் ஹோப் சதத்தை அடித்து 10 பவுண்டரி 5 சிக்சருடன் 120* (94) ரன்கள் குவித்து அசத்தினர். அதையும் சேர்த்து விக்கெட் கீப்பராக அவர் 5 சதங்கள் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர் என்ற தென்னாப்பிரிக்காவின் ஏபி டீ வில்லியர்ஸ் சாதனையை உடைத்துள்ள ஹோப் புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

ஸ்டைனை முந்திய சீல்ஸ்:

இதற்கு முன் டீ வில்லியர்ஸ் 4 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை. அந்தப் பட்டியலில் இந்தியாவின் எம்எஸ் தோனி 6 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணியை அபாரமாக பவுலிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 92 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக சல்மான் ஆஹா 30 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையும் படிங்க: வெறும் 92க்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை ஓடவிட்ட வெஸ்ட் இண்டீஸ் .. 34 வருடம் கழித்து 2 சாதனை வெற்றி

குறிப்பாக சாய்ம் ஆயுப் 0, அப்துல்லா சபிக் 0, பாபர் அசாம் 9, கேப்டன் ரிஸ்வான் 0 என பாகிஸ்தானின் டாப் 4 பேட்ஸ்மேன்களை சீல்ஸ் ஒற்றை இலக்கத்தில் காலி செய்தார். மொத்தம் 7.2 ஓவரில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்த அவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சை (6/18) பதிவு செய்த பவுலர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் 2013ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் 39 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.

Advertisement