எனக்கு இந்த சீக்கி ஷாட்லாம் செட் ஆகாது. நான் அடிச்சா சிக்ஸ் தான். ஏன் தெரியுமா? – கெத்தாக பேசிய ஷாருக்கான்

Shahrukh-Khan-2
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்தது. லக்னோ அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் கே.எல் ராகுல் 74 ரன்கள் அடித்தார். பின்னர் வெற்றிக்கு 160 ரன்கள் தேவை என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 19.3 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக சிக்கந்தர் ராசா 57 ரன்கள் குவித்தார். அது தவிர்த்து தமிழக வீரரான ஷாருக்கான் 10 பந்துகளை பிடித்து ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என அசத்தலான ஆட்டத்தை ஈடுபடுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 23 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஒரு கட்டத்தில் சிக்கந்தர் ராசா ஆட்டமிழந்து வெளியேறியதும் வழக்கம் போல பஞ்சாப் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Shahrukh khan

அந்த நேரத்தில் தமிழக அதிரடி ஆட்டக்காரரான ஷாருக் கான் தனது அதிரடியான பாணியில் போட்டியை பினிஷிங் செய்தது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது ஆட்டம் குறித்து பேசிய தமிழக வீரரான ஷாருக் கான் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சி. நிச்சயம் இந்த ரன்களை எங்களால் அடிக்க முடியும் என்று தெரியும்.

- Advertisement -

அதற்கு முதலில் சிக்கந்தர் ராசா மிகச் சிறப்பாக விளையாடி எங்களுக்கான வழியை அமைத்துக் கொடுத்தார். அதன் பிறகு என்னுடைய மனதில் இருந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான் பயிற்சியில் பந்து எவ்வாறு அடித்தோமோ அதை போன்ற அடிக்க வேண்டும் அது மட்டும் தான். ஏனெனில் நான் ஒரு பவர்ஃபுல் பேட்ஸ்மேன். என்னால் சீக்கி ஷாட் எல்லாம் விளையாட முடியாது. என்னுடைய பவருக்கு பெரிய சிக்சர்களை என்னுடைய உடற்கட்டின் மூலம் அடிக்க முடியும்.

இதையும் படிங்க : வீடியோ : மும்பையை வெளுத்து வாங்கிய வெங்கடேஷ் ஐயர், 15 வருடம் 5477 நாட்களுக்கு பின் கொல்கத்தாவுக்காக வரலாற்று சாதனை

அந்த வகையில் தான் பந்தை சிக்ஸருக்கு அடிப்பது என்று முடிவு செய்து விளையாடினேன். அதன்படி முதல் பந்தையே என்னால் எளிதாக சிக்சர் அடிக்க முடிந்தது. அதேபோன்று போட்டியின் கடைசி ஓவரிலும் என்னால் நிச்சயம் வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று நினைத்தேன். அந்த வகையில் போட்டியை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்தேன் என ஷாருக்கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement