அந்த தமிழக பிளேயர 13 கோடிக்கு வாங்க சிஎஸ்கே – குஜராத் போட்டி போடுவாங்க.. அஸ்வின் அதிரடி கணிப்பு

- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையற்ற வீரர்களை விடுவித்து தேவையான சில முக்கிய வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கியுள்ளன. அதில் குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து நடைபெற உள்ள மினி ஏலத்தில் வழக்கம் போல சில வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் அசத்திய ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த டிராவிஸ் ஹெட், நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்தரா போன்ற வீரர்களை வாங்க நிறைய அணிகள் போட்டி போடும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

அஸ்வின் கணிப்பு:
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஷாருக்கான் வாங்குவதற்கு நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் முன்னாள் சாம்பியன் குஜராத் ஆகிய அணிகளிடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்ப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் வித்தியாசமான கருத்தை வெளியிட்டுள்ளார். குறிப்பாக 12 – 13 கோடி வரை ஷாருக்கான் விலை போவார் என்று நம்புவதாக தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“ஷாருக்கான் வாங்குவதற்காக சிஎஸ்கே மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்கு இடையே போர் நடப்பதை நான் பார்ப்பேன். ஏனெனில் ஹர்திக் பாண்டியாவை விடுவித்துள்ள குஜராத்துக்கு ஃபினிஷிங் செய்வதற்கு அதிரடியாக விளையாடக்கூடிய தகுதியான வீரர் தேவை. அந்த நிலையில் பஞ்சாப் அணியில் 9 கோடிக்கு கடந்த வருடம் இருந்த சாருக்கானிடம் அவர்கள் எதிர்பார்க்கும் திறமை இருக்கிறது”

- Advertisement -

“அதனால் மீண்டும் அவர் 12 – 13 கோடி வரை விலை போகலாம். அதில் குறிப்பாக மிட்சேல் ஸ்டார்க்கை தவற விட்டாலும் பரவாயில்லை ஷாருக்கானை வாங்க வேண்டும் என்று சிஎஸ்கே முயற்சிக்கலாம். ஏனெனில் அவர்களுடைய அணியில் தற்சமயத்தில் ஒரு உள்ளூர் வீரர் இல்லாதது குறையாக இருக்கிறது. சொல்லப்போனால் கடந்த மெகா ஏலத்தில் அவர்கள் சாருக்கானை வாங்குவதற்கு போட்டி போட்டார்கள்”

இதையும் படிங்க: சுப்மன் கில்லுக்கு பதிலாக அவரை கேப்டனா போட்ருக்கலாம்.. குஜராத் அணியின் முடிவால் ஏபிடி அதிருப்தி

“எனவே இம்முறை அப்போது விட்டதை அவர்கள் பிடிக்க முயற்சிப்பார்கள் என்று கணிக்கிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழகத்திற்காக சயீத் முஸ்டாக் அலி கோப்பை போன்ற தொடர்களில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்து தமிழகத்தின் ஃபினிஷராக ரசிகர்களால் பாராட்டப்படும் சாருக்கானை வாங்குவதற்கு நிறைய அணிகள் போட்டி போடலாம். ஒருவேளை அஸ்வின் சொல்வது போல் அவரை சென்னை வாங்கினால் தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

Advertisement