சுப்மன் கில்லுக்கு பதிலாக அவரை கேப்டனா போட்ருக்கலாம்.. குஜராத் அணியின் முடிவால் ஏபிடி அதிருப்தி

- Advertisement -

ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வாங்கியது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் 2022இல் தோற்றுவிக்கப்பட்ட குஜராத்துக்கு 15 கோடிக்காக வாங்கப்பட்ட அவர் முதல் சீசனிலேயே அபாரமாக விளையாடி கோப்பையை வென்று கொடுத்து 2வது சீசனில் ஃபைனல் வரை அழைத்து சென்றார்.

அதனால் இந்தியாவின் அடுத்த கேப்டனாகும் அளவுக்கு முன்னேற்றத்தை சந்தித்த அவர் திடீரென குஜராத் அணியின் கேப்டன்ஷிப் பதவியை விட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சென்றுள்ளது நிறைய சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலைமையில் 2024 சீசனில் தங்களுடைய அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர இளம் துவக்க வீரர் சுப்மன் கில் செயல்படுவார் என்று குஜராத் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

ஏபிடி அதிருப்தி:
2018 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர்நாயகன் விருது வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் சமீப காலங்களாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே காலண்டர் (2023) வருடத்தில் சதமடித்த முதல் இந்திய துவக்க வீரர் என்ற சாதனை படைத்த அவர் ஐபிஎல் தொடரிலும் 2023 சீசனில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

அதனால் சச்சின், விராட் கோலி ஆகியோருக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் அவரை குஜராத் தங்களுடைய வருங்கால கேப்டனாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இது போன்ற தருணத்தில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று 2019 ஃபைனல் வரை நியூசிலாந்தை அழைத்துச் சென்ற மிகப்பெரிய அனுபவமிக்க கேன் வில்லியம்சனை கேப்டனாக அறிவிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருந்தும் குஜராத் தவற விட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தம்முடைய கருத்தை சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “குஜராத் அணியின் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் கேன் வில்லியம்சன் பெயரை பார்த்ததும் உங்களுக்கு கேப்டன்ஷிப் செய்ய ஏற்கனவே கேப்டனாக செயல்பட்ட அனுபவிக்க வீரரை நியமிக்க நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன்”

இதையும் படிங்க: தெ.ஆ தொடரிலிருந்து வெளியேறும் விராட் கோலி.. காரணம் என்ன? முழுமையான விவரம்

மறுபுறம் சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டது இந்திய கிரிக்கெட்டில் அனைத்து வகையான அணியில் நிலையான இடத்தை பிடிப்பதற்காகவும் நல்ல ஐபிஎல் சீசனை பெறுவதற்காகவும் மட்டுமே உதவும். அதை தவறு என்று நான் சொல்லவில்லை. இது கில்லுக்கு நல்ல வாய்ப்பாகும் அவர் கேப்டனாக செயல்படுவதை நானும் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement