பர்ஸ்ட் அவங்க. இப்போ இவங்க. பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு மாசான பேட்டியை அளித்த – ஆப்கனிஸ்தான் கேப்டன்

Shahidi
- Advertisement -

நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியானது இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. அதன்படி இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 282 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 74 ரன்களையும், துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் 58 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 49 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 286 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலககோப்பை தொடரில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே இது பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர்கள் பெற்ற முதல் வெற்றியாக அமைந்தது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜாத்ரான் மற்றும் 3 ஆவது இடத்தில் களமிறங்கிய ரஹமத் ஷா ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி கூறுகையில் :

- Advertisement -

இந்த வெற்றியை பெற்றதில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் ஒரு தரமான அணியாக இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். இனிவரும் போட்டிகளிலும் இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்த காத்திருக்கிறோம். இன்றைய போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணியை வீழ்த்திய நாங்கள் தற்போது பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியுள்ளதில் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : உள்ள இறந்கும் போதே அந்த முடிவோட தான் நானும் குர்பாஸும் இறங்குனோம் – ஆட்டநாயகன் இப்ராஹீம் ஜார்டான் பேட்டி

எங்களது அணி ஆசியக் கோப்பை தொடரிலிருந்தே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இதே வெற்றியை இனிவரும் போட்டிகளிலும் பெற விரும்புகிறோம். எங்களால் முடிந்த அளவு பாசிட்டிவாக விளையாடி எங்கள் அணிக்கும், எங்கள் நாட்டிற்கும் பெருமையை தேடித் தர விரும்புகிறோம். இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக நினைப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement