- Advertisement -
உலக கிரிக்கெட்

நீங்க பேட்டிங்ல மட்டும் கவனத்தை செலுத்துங்க. உங்களுக்கு கேப்டன்ஷிப் தேவையில்லை – ஷாஹித் அப்ரிடி விளாசல்

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பினை தவறவிட்டது. இந்த தொடரின் ஆரம்பத்தில் சூப்பர் 12 சுற்றுக்கு அடுத்து அரையிறுதிக்கு கூட தகுதி பெறாது என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது ஒரு வழியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து பின்னர் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெறும் இன்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தானின் மோசமான பேட்டிங் காரணமாக இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் அவர்கள் தோல்வியை சந்தித்தனர். இந்நிலையில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரரான ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த வேளையில் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும் நேரத்தில் பாபர் அசாம் பதவி விலக வேண்டும் என்று அப்ரிடி கூறிய கருத்து தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில் :

டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து பாபர் அசாம் பதவி விலக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி இனிமேல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் அணியை வழி நடத்த வேண்டும். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை வேறு கேப்டன் இருப்பது அணிக்கு நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

பாபர் அசாமை நான் மிகவும் மதிக்கிறேன். அதனால் தான் டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று கூறுகிறேன். அவர் கேப்டனாக இருப்பது அவருக்கு பேட்டிங்கில் அழுத்தத்தை கொடுக்கிறது அதனை நான் விரும்பவில்லை.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் அவரோட இடத்தை நிரப்புவது ரொம்ப கஷ்டம் – ரவிச்சந்திரன் அஷ்வின் ஓபன்டாக்

எனவே அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி நல்ல ஒரு வீரராக திகழ வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். டி 20 கிரிக்கெட்டை பொருத்தவரை ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் ஆகிய வீரர்கள் கேப்டன்சி செய்யும் திறமை பெற்றுள்ளனர் என அப்ரிடி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by