கொரோனாவில் இருந்து மீண்டு வந்தும் வாய்க்கொழுப்பு அடங்காத அப்ரிடி – இந்திய அணியை மீண்டும் சீண்டல்

Afridi
- Advertisement -

இந்திய அணிக்கு கங்குலி கேப்டன் ஆனதுக்கு பிறகு இந்திய அணி 2000மாவது ஆண்டுகளில் பாகிஸ்தானை அதிக போட்டிகளில் வீழ்த்தி உள்ளது. குறிப்பாக ஐ.சி.சி நடத்தும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது இல்லை என்ற பெருமையையும் இந்திய அணிக்கு உள்ளது.

Pak

- Advertisement -

கங்குலி தலைமையிலான அணிதான் அதிக அளவில் வெற்றி குதிக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் தோனி, கோலி போன்ற கேப்டன்கள் அவரின் வழியை பின்பற்றி பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி அடுத்தடுத்து வெற்றியை குவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பெரிய அணியாக வளர்ந்து நிற்கும் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி பல தோல்விகளை கண்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியைப் பற்றி தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது சர்ச்சையான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். எப்பொழுதும் இந்திய அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை கூறிவரும் அப்ரிடி தற்போதும் அதே போன்ற ஒரு கருத்தினை முன்வைத்துள்ளார்.

Pakistan

இதுகுறித்து கிரிக்கெட் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய அப்ரிடி கூறுகையில் : இந்தியாவுக்கு எதிராக ஆடத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்திய அணி பல முறை அடித்து துவம்சம் செய்து இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக விளையாடும் பொழுது ரசித்து உற்சாகமாக ஆடுவேன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும்போது அழுத்தம் இருக்கும்.

- Advertisement -

ஆனால் இந்திய அணிக்கு எதிராக விட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறினார். மேலும் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஆயிரத்து 80-90 களில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது என்றும் இந்திய அணியை பாக்கிஸ்தான் அணி பலமுறை எளிதாக வீழ்த்தி கதற வைத்துள்ளதாக அப்ரிடி கூறியுள்ளார்.

Afridi

அப்ரிடி இதுபோன்று இந்திய அணிக்கு எதிராக இதுபோன்ற கருத்தினை கூறுவது புதிதல்ல. அவரின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்மைறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Advertisement