- Advertisement -
ஆசிய கோப்பை

இந்தியன்னு நிரூபிக்க முயற்சிக்கும் கெட்டுப்போன முட்டை.. தவான், யுவியை மறைமுகமாக விமர்சித்த அப்ரிடி

ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்திய அணி அடுத்ததாக பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ள அப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் இயற்கை எய்தினார்கள்.

அதற்கு பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுத்த இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய லெஜண்ட்ஸ் லீக் தொடர் நடைபெற்றது. அத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவதாக இருந்தது. அப்போது இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்கும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டில் விளையாடலாமா? என்ற சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

கெட்டுப்போன முட்டை:

அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்று ஷிகர் தவான், ஹர்பஜன் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து யுவராஜ் சிங் தலைமையிலான மொத்த இந்திய அணியும் பாகிஸ்தான் எதிராக விளையாடாமல் வெளியேறியது. அதே போல ஆசியக் கோப்பையில் விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங், கேதார் யாதவ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

இருப்பினும் இந்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் முதன்மையான இந்திய அணியே ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளதாக ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். ஆனால் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகியவர்கள் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிக்க முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அப்ரிடி விமர்சனம்:

இது பற்றி அப்ரிடி பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட் எப்போதும் நடைபெற வேண்டும் என்று நான் சொல்வேன். ஏனெனில் அதை இரு நாடுகளின் நட்பை வலுப்படுத்த உதவலாம். இங்கிலாந்தில் லெஜெண்ட்ஸ் லீக் போட்டியைப் பார்க்க மக்கள் டிக்கெட் வாங்கினார்கள். வீரர்கள் பயிற்சி எடுத்தனர். ஆனால் கடைசியில் நீங்கள் விளையாடவில்லை. அதன் பின்னணியில் உள்ள சிந்தனை என்ன? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு காரணமாக அமைந்த வீரரின் (தவான்) பெயரைக் குறிப்பிட்டால் அது அவருடைய வாழ்க்கையை கடினமாக்கும்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டிக்கு முன்னர் தனது மகனை வாழ்த்திய அபிஷேக் சர்மாவின் தந்தை – விவரம் இதோ

“நான் குறிப்பிடும் வீரர் ஒரு மோசமான முட்டை. அவருடைய கேப்டன் (யுவ்ராஜ்) நீங்கள் விளையாட விரும்பவில்லையெனில் விளையாடாதீர்கள். ஆனால் அதை சமூக வலைதளத்தில் பதிவிடாதீர்கள் என்று அவரிடம் சொன்னார். அதையும் தாண்டி பதிவிட்டாதாலேயே அந்த வீரர் மோசமான முட்டையாக இருக்கிறார். சில வீரர்கள் இன்னும் தங்களை இந்தியன் என்று நிரூபிக்க முயற்சிக்கின்றனர். அதை தாங்கள் பிறந்ததிலிருந்து காட்ட முயற்சிக்கும் அவர்கள் தற்போது ஆசியக் கோப்பையில் வர்ணனையாளராக செயல்படுகின்றனர்” என்று கூறினார்.

- Advertisement -