எப்போவும் இந்தியாவும் குறை சொல்லாதீங்க, தில் இருந்தா ஜெயிச்சு காட்டுங்க – பாக் வாரியத்தை சாடிய அப்ரிடி, நடந்தது என்ன?

- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளை மட்டும் விளையாடி வருகின்றன. ஆனால் அந்த வரிசையில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் 2023 ஆசியக் கோப்பையில் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு பயணித்து இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுப்போம் என்று தெரிவித்தார்.

Jay Shah IND vs PAk

- Advertisement -

அதனால் கொந்தளித்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபரில் உங்கள் நாட்டில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையை புறக்கணிப்போம் என அறிவித்தது. அதிலிருந்தே கடந்த 6 மாதங்களாக இந்த விவகாரம் இருநாட்டுக்குமிடையே சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வந்த நிலையில் கடுமையாக போராடி சர்வதேச கிரிக்கெட்டை தங்களது நாட்டுக்கு மீண்டும் கொண்டு வந்துள்ள பாகிஸ்தான் இத்தொடரை 15 வருடம் கழித்து சொந்த மண்ணில் நடத்திய தீருவோம் என்று விடாப்பிடியாக நின்றது.

அப்ரிடி சாடல்:
மறுபுறம் பாகிஸ்தானில் அடிக்கடி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடைபெறுவதால் உங்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் இந்தியாவை அனுப்ப முடியாது என பிசிசிஐ அடம் பிடித்தது. அந்த நிலையில் இரு தரப்பையும் திருப்திப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பங்கேற்கும் 4 லீக் சுற்று போட்டிகள் அவர்கள் நாட்டிலும் ஃபைனல் உட்பட இந்தியா பங்கேற்கும் எஞ்சிய 9 போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கும் ஆசிய கவுன்சில் அனுமதி கொடுத்துள்ளது. இதனால் இந்த பிரச்சனை முடிந்து விட்டதாக நினைத்தாலும் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை 15ஆம் தேதியன்று அகமதாபாத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

Jay Shah Najam Sethi

ஆனால் அந்த மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு இருக்காது என்று தெரிவித்த அந்நாட்டு வாரிய தலைவர் நஜாம் சேதி தங்கள் அணி பங்கேற்கும் போட்டிகள் சென்னை, பெங்களூரு போன்ற தென் மாநிலங்களில் நடைபெற்றால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையில் பங்கேற்க வருவோம் என சமீபத்தில் அறிவித்தர். குறிப்பாக 1999இல் இந்தியா தோற்றாலும் தரமான கிரிக்கெட்டை பாராட்டிய ரசிகர்களை கொண்ட சென்னையில் பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுவதை விரும்பும் அவர் 2016 டி20 உலக கோப்பையில் தரம்சாலாவில் நடைபெறுவதாக இருந்த தங்கள் போட்டியை கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டதை போன்ற முடிவை பிசிசிஐ எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் எதற்கெடுத்தாலும் இந்தியாவை குறை சொல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் வாரியத்தை முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய தேர்வுக்குழு தலைவர் சாகித் அப்ரிடி விமர்சித்துள்ளார். மேலும் உண்மையாகவே நீங்கள் இந்தியாவை தோற்கடிக்க விரும்பினால் அவர்கள் கொடுக்கும் மைதானத்தில் அவர்களுடைய ரசிகர்களுக்கு முன்னிலையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாகை சூடி பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர இப்படி குறை சொல்லக்கூடாது என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டில் பேசியது பின்வருமாறு.

Afridi

“அவர்கள் ஏன் அகமதாபாத் மைதானத்தில் விளையாட மறுக்கிறார்கள்? அது நெருப்பு வீசுகிறதா அல்லது பேய் பிடித்திருக்கிறதா? அங்கே சென்று விளையாடுங்கள். அங்கே சென்று வெற்றி வாகை சூடுங்கள். இது போன்ற சவால்களில் நீங்கள் வெற்றிகளால் மட்டுமே சாதித்து காட்டி வெளியே வர முடியும். அதை விட நாளின் முடிவில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்பதே முக்கியமாகும். பிறையும் வளர்ச்சியும் அதில் தான் உள்ளது. இதை நேர்மறையாக எடுத்துக் கொள்ளுங்கள்”

இதையும் படிங்க:ஆசியக்கோப்பை தொடருக்கெல்லாம் அவங்க 2 பேரு டீமுக்குள்ள வரனும் – தீவிரம் காட்டும் பி.சி.சி.ஐ

“ஒருவேளை அஹமதாபாத் தான் தங்களுக்கு வசதியாக இருக்கிறது என்று இந்தியா நினைத்தால் நீங்களும் அங்கே சென்று இந்திய ரசிகர்கள் நிரம்ப வழியும் மைதானத்தில் அவர்களுக்கு முன்னிலையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாகை சூடி உங்களுடைய தரத்தை காட்டுங்கள்” என்று கூறினார். முன்னதாக பாகிஸ்தானுக்கு சவாலை கொடுக்கும் இந்திய அரசின் முக்கிய தலைவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதாலேயே அங்கிருக்கும் அகமதாபாத் மைதானத்தில் அந்நாடு விளையாட மறுப்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement