ஆசியக்கோப்பை தொடருக்கெல்லாம் அவங்க 2 பேரு டீமுக்குள்ள வரனும் – தீவிரம் காட்டும் பி.சி.சி.ஐ

Kuldeep Yadav Ind Shubman gill kl rahul
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் தோல்வி அடைந்து மீண்டும் ஒருமுறை ஐசிசி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பினை இழந்தது. அதனை தொடர்ந்து இந்திய அணியின் மீதும், கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் மீதும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Rohit sharma IND vs NZ

- Advertisement -

அதே வேளையில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுவதால் அதற்காக தற்போது இந்திய அணியை தீவிரப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது.

ஏனெனில் சமீபத்தில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயமடைந்து அணியில் இருந்து வெளியேறி உள்ளதால் அவர்கள் எப்போது திரும்புவார்கள் என்கிற தகவல் தெரியாமலே இருக்கிறது. குறிப்பாக ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல் ராகுல், ஸ்ரேயாஷ் ஐயர் போன்ற நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணியில் இல்லாமல் இருந்து வருவது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இவர்கள் அனைவரும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டுமெனில் நிச்சயம் அதற்கு முன்னதாக சில மாதங்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் அவர்களை இடம்பெயர் செய்து விளையாட வைக்க தற்போது பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் முதலாவதாக பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் தற்போது அணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அவர்கள் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 ஆவது பங்களாதேஷ் வீரராக நஜ்முல் ஷாண்டோ படைத்த வரலாற்று சாதனை – என்ன தெரியுமா?

அதற்குள் அவர்களை முழு அளவில் தயார் படுத்துமாறு தேசிய அகாடமி-யிடம் பிசிசியை தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்குள் தயாராவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement