டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 ஆவது பங்களாதேஷ் வீரராக நஜ்முல் ஷாண்டோ படைத்த வரலாற்று சாதனை – என்ன தெரியுமா?

Najmul-Shanto
- Advertisement -

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 546 ரன்கள் என்கிற மிகப்பெரிய வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி கடந்த 14-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Najmul Shanto 1

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி தங்களது முதல் இன்னிங்சில் 382 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தங்களது முதல் இன்னிங்சில் 146 ரன்கள் மட்டுமே குவித்தது.

அடுத்ததாக 236 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணியானது 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் 661 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Najmul Shanto 2

அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தங்களது இரண்டாவது இன்னிங்சிலும் 115 ரன்கள் ஆட்டம் இழக்கவே வங்கதேச அணியானது 546 ரன்கள் என்கிற இமாலய ரன்கள் வித்யாசத்தில் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது வங்கதேச அணி சார்பாக விளையாடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நஜ்முல் ஷாண்டோ டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது வங்கதேச வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 175 பந்துகளை சந்தித்த அவர் 23 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 146 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : வீடியோ : இதாங்கா வரலாற்றின் மகத்தான கேட்ச், சூப்பர்மேனாக பறந்த இங்கிலாந்து வீரர் – வியந்து பாராட்டிய டிகே

அதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸிலும் 151 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்சிலும் சதம் அடித்த இரண்டாவது வங்கதேச வீரர் என்ற சாதனையை நஜ்முல் ஷாண்டோ படைத்தார். இவருக்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக மொமினுள் ஹக் இந்த சாதனையை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement