- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நீங்க செய்ற எல்லாமே சரியில்லை கம்பீர்.. முதுகெலும்பு விராட், ரோஹித் அதுக்கு தகுதியானவங்க.. அப்ரிடி சாடல்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து தோற்றது. இருப்பினும் அடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அதற்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பேட்டிங் துறையில் பெரிய ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினர்.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர்கள் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

- Advertisement -

விராட், ரோஹித் தகுதியானவங்க:

அதனாலேயே 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. ஆனால் அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா தொடரில் தொடர்நாயகன் விருது வென்று கம்பீருக்கு பதிலடி கொடுத்தார். தற்போது தென்னாப்பிரிக்கா தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற விராட் கோலி அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஆனாலும் உலகக் கோப்பைக்கு இன்னும் 2 வருடங்கள் இருப்பதால் விராட், ரோஹித் வாய்ப்பு உறுதியாகவில்லை என்று கௌதம் கம்பீர் தெரிவித்தது ரசிகர்களை கடுப்பேற்றியது. இந்நிலையில் அனைத்து நேரமும் நாம் சரியாக இருப்போம் என்று நினைப்பது தவறான கண்ணோட்டம் என கம்பீரை முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார். மேலும் விராட், ரோஹித் உலக கோப்பையில் விளையாடத் தகுதியானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அஃப்ரிடி சாடல்:

இது பற்றி அஃப்ரிடி பேசியது பின்வருமாறு. “விராட், ரோஹித் இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பு. சமீபத்திய ஒருநாள் தொடரில் அவர்கள் விளையாடிய விதத்தை வைத்து, 2027 உலகக் கோப்பை வரை அவர்கள் விளையாடுவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்லலாம். அந்த 2 நட்சத்திரங்களையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும்”

இதையும் படிங்க: 2025 ஆம் ஆண்டிற்கான டாப் வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்த இருக்கும் அசத்தல் சாதனை – விவரம் இதோ

“பலவீனமான அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் போது நீங்கள் அவர்களுக்கு ஓய்வு கொடுத்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். கௌதம் தன்னுடைய பயிற்சியாளர் வேலையைத் துவங்கிய விதத்தை வைத்து பார்க்கையில் அவருடைய சிந்தனை மற்றும் செயல்முறைகள் சரியாக இருப்பது போல் தெரிந்தது. ஆனால் சில நேரம் கழித்து பார்த்தால் நீங்கள் எப்போதும் சரியாக இருக்க முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -