சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற பாகிஸ்தான் அணியானது தாங்கள் விளையாடிய முதல் இரண்டு போட்டியில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக லீக் சுற்றில் முடிவிலேயே பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் தவறு இதுதான் : ஷாஹித் அப்ரிடி
அதோடு இந்த தோல்வியால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த அணியின் மோசமான செயல்பாடு குறித்து பல்வேறு காட்டமான விமர்சனங்களை வெளிப்படையாக முன் வைத்திருந்தனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் கூறுகையில் :
தற்போதுள்ள பாகிஸ்தான் அணியில் ஆறு, ஏழு வீரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக துடிப்பான இளமையான இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் தற்போது இருந்தே 2026 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் அந்த கருத்திற்கு பதில் கொடுத்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி கூறுகையில் : வாசிம் அக்ரம் சொன்னதை நான் கேட்டேன். அன்று நம் அணி அடைந்த தோல்வியால் நாம் அனைவருமே வருத்தத்தில் இருந்தோம். அதே வேளையில் அவர் ஆறு முதல் ஏழு வீரர்களை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறுகிறார்.
அவரிடம் நான் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றுதான். அந்த ஆறு, ஏழு வீரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக எந்த வீரர்களை அணியில் சேர்ப்பீர்கள்? நமது உள்ளூர் கிரிக்கெட்டில் அதுபோன்ற வீரர்களே கிடையாது. அதேபோன்று நாம் அதுபோன்ற வீரர்களை பயிற்றுவித்து வளர்த்தெடுக்கவும் இல்லை.
இதையும் படிங்க : மீண்டும் அந்த நாளுக்காக தான் நான் காத்துகிட்டு இருக்கேன் – ரவிச்சந்திரன் அஷ்வின் விருப்பம்
அதுபோன்ற ஒரு சரியான பயிற்சி மையமே நம்மிடம் கிடையாது என்றும் அடிப்படை கட்டமைப்பே நமது நிர்வாகத்தால் சரியாக செய்யப்படவில்லை என்கிற உண்மையை ஷாஹித் அப்ரிடி வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



