மீண்டும் அந்த நாளுக்காக தான் நான் காத்துகிட்டு இருக்கேன் – ரவிச்சந்திரன் அஷ்வின் விருப்பம்

Ashwin
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் வருடா வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று வரும் வேளையில் 2025-ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் தொடரானது எதிர்வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்கி மே மாதம் 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று கோப்பையை கைப்பற்ற பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன.

மீண்டும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் : ரவிச்சந்திரன் அஷ்வின்

இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மெகா ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின் அதன் பின்னர் பல்வேறு அணிகளுக்கு விளையாடியிருந்தார். அது தவிர்த்து சில ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக கேப்டன்சியும் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 38 வயதாகும் அவர் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள வேளையில் மீண்டும் பத்து ஆண்டுகள் கழித்து சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்த அவர் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது குறித்து சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே இது மிகவும் வித்தியாசமான உணர்வாக இருக்கிறது. நான் இங்கிருந்து வெளியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் வித்தியாசமாக உணர்கிறேன். மீண்டும் அதே அணிக்கு தற்போது திரும்பி உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதுவரை இருந்த சீசன்களை விட இந்த சீசனில் விளையாட மிகவும் வெறித்தனமாக பயிற்சி செய்து வருகிறேன்.

இதையும் படிங்க : நான் 10000 ரன்ஸ் எவரெஸ்ட் உலக சாதனை படைக்க இம்ரான் கான் தான் காரணம்.. 1986 பின்னணியை பகிர்ந்த கவாஸ்கர்

மீண்டும் சிஎஸ்கே அணிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் நாளை நோக்கி நான் ஆவலாக காத்திருக்கிறேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். சென்னை அணி இந்த சீசனில் தங்களது முதல் லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து மார்ச் 23-ஆம் தேதி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement