இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் 80களின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். அந்தக் காலகட்டங்களில் அசுர வேகத்தில் வெறித்தனமாக பௌலிங் செய்து மண்டையை பதம் பார்க்கக் கூடிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை ஹெல்மெட் போடாமலேயே அவர் சிறப்பாக எதிர்கொண்டதை மறக்க முடியாது. அந்த வகையில் சவாலான பவுலர்களை எதிர்கொண்ட கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
அதை 1987ஆம் ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது கவாஸ்கர் அந்த சாதனையைப் படைத்தார். இந்நிலையில் 1986ஆம் ஆண்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் முடிவை எடுத்திருந்ததாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அப்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் இன்னுமொரு வருடம் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.
உலக சாதனை 10000:
அவருடைய நட்பான கோரிக்கைக்கு இணங்கி விளையாடியதன் காரணத்தாலேயே தம்மால் 10000 ரன்கள் அடித்து உலக சாதனை படைக்க முடிந்ததாகவும் கவாஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது பற்றி டென் ஸ்போர்ட்ஸ் எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் வாசிம் அக்ரம் கேள்விக்கு கவாஸ்கர் பதிலளித்தது பின்வருமாறு. “10000 மைல்கல்லை தொட்டது அற்புதமான உணர்வு”
“என்னுடைய கேரியரை துவங்கிய போது நான் 10,000 ரன்கள் அடிப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. சொல்லப்போனால் 1000 ரன்கள் அடித்தாலே மகிழ்ச்சியாக இருப்பேன் என்று தான் கேரியரைத் துவங்கினேன். 10000 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது என்னுடைய இலக்காக இல்லை. யார் மேலே சென்றாலும் டென்சிங் நார்கே, எட்முட் ஹிலாரி ஆகியோர் தான் எவரெஸ்ட் சிகரத்தை பெற்ற முதல் நபர்களாக நினைவு கொள்ளப்படுகிறார்கள்”
இம்ரான் கான் நட்பு:
“அதே போல 10000 ரன்களை அடித்த முதல் நபரும் நினைவு கொள்ளப்படுவார்கள். அந்த பொன்னான சாதனையை செய்யும் வாய்ப்பு இம்ரான் கான் எனும் ஒருவரால் மட்டுமே எனக்கு கிடைத்தது. 1986ஆம் ஆண்டு இங்கிலாந்தில் லண்டனில் இருக்கும் ஒரு இத்தாலியின் உணவகத்திற்கு நானும் அவரும் சாப்பிடச் சென்றோம். அப்போது அதுவே எனது கடைசித் தொடர் என்று அவரிடம் சொன்னேன். அதற்கு இல்லை இல்லை நீங்கள் ஓய்வு பெற முடியாது என்று அவர் சொன்னார்”
“ஏன் முடியாது? அது என்னுடைய முடிவு என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அடுத்த வருடம் இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி வரும் போது நீங்கள் இல்லாத அணியை தோற்கடிக்க விரும்பவில்லை என்று இம்ரான் சொன்னார். அதற்கு அந்தத் தொடர் பற்றிய அறிவிப்பு ஐசிசி இடமிருந்து வரவில்லையெனில் நான் ஓய்வு பெறுவேன் என்று சொன்னேன்”
இதையும் படிங்க: துபாயில் சாதகம் இருந்தா என்ன? அந்த ஒய்ட்வாஷ் வெற்றி மாதிரி இந்தியாவை வீழ்த்துவோம்.. பிரேஸ்வெல் நம்பிக்கை
“கடைசியில் அவர் சொன்னது போலவே அந்தத் தொடர் பற்றிய அறிவிப்பு வந்தது. ஒருவேளை அப்போதே ஓய்வு பெற்றிருந்தால் 9200 – 9300 ரன்களுடன் விடைபெற்றிருப்பேன். ஆனால் இம்ரான் சொன்னதால் 10000 ரன்கள் தாண்ட முடிந்தது. பாகிஸ்தானுக்கு முன்பு 2 தொடர்களும் விளையாடினேன்” என்று கூறினார்.



