
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை தொடரை இலங்கை அணி வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகப்பெரிய தொடராக அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டிகளானது நடைபெற இருக்கிறது. அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
வேகத்திற்கு பெயர் போன ஆஸ்திரேலியா மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளதால் இம்முறை எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது. இந்த டி20 உலக கோப்பை தொடருக்காக 16 நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய எட்டு நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். அதே போன்று தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடும் அணிகளில் சில அணிகள் அடுத்த சுற்றில் வந்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும்.
இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அணிகளை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி அறிவித்ததால் ஒவ்வொரு நாடாக தங்களது அணிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் இன்று தங்களது டி20 உலக கோப்பை அணியை அறிவித்துள்ளது. அதில் பாபர் அசாம் கேப்டனாகவும், துணை கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாகிஸ்தான் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரரான ஷாஹீன் ஷா அப்ரிடி மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். சமீப காலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாதது அந்த அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்பட்ட வேளையில் அவர் மீண்டும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளது அந்த அணிக்கு வலு சேர்த்துள்ளது என்றே கூறலாம். டி20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி இதோ :
இதையும் படிங்க : முடிஞ்சா என்கிட்ட பேசுங்க. அர்ஷ்தீப் சிங்கிற்காக வரிந்து கட்டி சப்போர்டுக்கு நிற்கும் வாசிம் அக்ரம் – நடந்தது என்ன?
பாபர் அசாம் (கேப்டன்) , ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யுஸ்மான் காதர்