- Advertisement -
உலக கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் பாகிஸ்தான் வீரராக ஷாஹீன் அப்ரிடி படைக்கவுள்ள சாதனை – விவரம் இதோ

பாகிஸ்தான் அணி தற்போது சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டிய வேண்டுமெனில் இனிவரும் தொடர்களில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ள வேளையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடர் அவர்களுக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இன்னும் மொத்தமாக 7 போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. இதில் முதல் இரண்டு போட்டிகள் வங்கதேச அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

அதன் பின்னர் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த 7 போட்டிகளில் சொந்த மண்ணில் ஐந்து போட்டிகள் உள்ளதால் பாகிஸ்தான் அணிக்கு இந்த இரு தொடர்கள் வெற்றி பெறுவதற்கு சாதகமான வாய்ப்பாக இருக்கும். அதோடு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறவும் இந்த வெற்றிகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி வங்கதேச அணிக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோருடன் எலைட் கிளப்பில் இணைய உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒட்டுமொத்தமாகவே சேர்த்து 24 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள ஷாஹீன் அப்ரிடி 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்த இருக்கிறார்.

இதையும் படிங்க : கபில் தேவ் கேப்டன், தோனி துணை கேப்டன்.. தனது ஆல் டைம் தரமான இந்திய அணியை வெளியிட்ட பசித் அலி

ஏற்கனவே இந்த சாதனை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் 197 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து பேட் கம்மின்ஸ் 175 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் அஸ்வின் 174 விக்கெட்டுகளுடனும் இருக்கிறார். இதேபோன்று இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய வீரர்களாக பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோரும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -