கபில் தேவ் கேப்டன், தோனி துணை கேப்டன்.. தனது ஆல் டைம் தரமான இந்திய அணியை வெளியிட்ட பசித் அலி

Basit Ali India 3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்ட கனவு அணியை அவ்வப்போது பலரும் வெளியிடுவது வழக்கமாகும். அந்த வகையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தன்னுடைய தரமான 11 வீரர்களைக் கொண்ட இந்திய டெஸ்ட் அணியை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணிக்கு 1983 உலகக் கோப்பையை வென்று இந்தியாவில் கிரிக்கெட் ஆழமாக வேரூன்ற முக்கிய காரணமான கபில் தேவை அவர் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்.

அதே போல 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக உலக சாதனை படைத்துள்ள எம்.எஸ். தோனியை அவர் துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். அதே சமயம் சச்சின், டெண்டுல்கர் ரோஹித் சர்மா போன்றவர்களையும் தேர்ந்தெடுத்துள்ள அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பசித் அலி லெவன்:
“இந்தியாவிலிருந்து துவங்குகிறேன். அதில் மகத்தான சுனில் கவாஸ்கரை விட சிறந்த ஓப்பனர் இருக்க முடியாது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தரமான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட அவர் நிறைய ரன்கள் குவித்துள்ளார். இந்தியா எத்தனையோ மகத்தானவர்களை உருவாக்கியுள்ளது”

“ஆனால் ஹெல்மெட் இல்லாமலேயே வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொண்ட கவாஸ்கர் சிறந்தவர். 2வது இடத்தில் விரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் சர்மாவை நான் தேர்ந்தெடுப்பேன். அதில் உங்களுக்கு பிடித்தவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். 3வது இடத்தில் கண்டிப்பாக விராட் கோலி சரியானவர். 4வது இடத்தில் வேறு யாரையும் எடுக்க முடியாது. 4வது இடத்தில் உலகிலேயே அதிக ரன்கள் அடித்தவர் (சச்சின்) இருப்பார்”

- Advertisement -

“5வது இடத்தில் முகமது அசாருதீன் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை தேர்ந்தெடுப்பேன். அதில் ஒருவரை தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பம். அசாருதீன் நிறைய சிறந்த வீரர்களை தனது அணியில் உருவாக்கினார். இது டி20 அணியல்ல டெஸ்ட் அணியாகும். எனவே டாப் க்ளாஸ் எம்எஸ் தோனி துணை கேப்டனாகவும் 1983 சாம்பியன் கபில் தேவ் கேப்டனாகவும் இருப்பார்கள்”

“8வது இடத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகள் எடுத்த சிறந்த பவுலர் மற்றும் மனிதர் அனில் கும்ப்ளே இருப்பார். 9வது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை நினைத்தாலும் ஹர்பஜனை தேர்ந்தெடுப்பேன். 10வது இடத்தில் வேகப்பந்து வீச்சாளராக இந்தியாவின் பூம் பூம் நம்பர் ஒன் பும்ரா இருப்பார். 11வது இடத்தில் கண்டிப்பாக ஸ்ரீநாத் மற்றும் ஜகீர் கான் இருப்பார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: மோர்னே மோர்கலிடம் உள்ள ஸ்பெஷல் இதுதான்.. அதனால் தான் இப்போ பவுலிங் கோச் ஆகியிருக்காரு – கவுதம் கம்பீர் கருத்து

பசித் அலி இந்திய டெஸ்ட் லெவன்: சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக்/ரோகித் சர்மா, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன்/ராகுல் டிராவிட், எம்.எஸ். தோனி (துணை கேப்டன்), கபில் தேவ் (கேப்டன்), அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, ஜாகீர் கான்/ஜவகர் ஸ்ரீநாத்.

Advertisement