இந்திய அணியில் நான் அவரது மிகப்பெரிய ரசிகன். எனக்கு பிடித்த வீரர் அவர்தான் – ஷாஹீன் அப்ரிடி ஓபன்டாக்

Shaheen-afridi
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் 21 வயது இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 21 டெஸ்ட் போட்டிகள், 28 ஒருநாள் போட்டிகள் மற்றும் 39 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மிக இளம் வயதிலேயே தனது வேகப்பந்து வீச்சின் மூலம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷாஹீன் அப்ரிடி மிகப்பெரிய எதிர் காலமாக பாகிஸ்தான் அணியால் பார்க்கப்படுகிறார்.

shaheen afridi

- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது கூட இந்திய அணிக்கு எதிராக அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவர் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களான கே.எல் ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது முக்கியமான அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது குறித்தும், இந்திய அணிக்கு எதிராக விளையாடியது குறித்தும் பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் போது பெரும்பாலான வீரர்கள் முதல் முறையாக உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினோம். இது எங்கள் அனைவருக்குமே ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.

Shaheen-afridi-1

நாங்கள் விளையாடிய விதம் எங்களால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. எங்கள் அணியில் உள்ள ஒரு பவுலர் விக்கெட் வீழ்த்தவில்லை என்றால் மற்ற வீரர்களால் விக்கெட் வீழ்த்த முடியும் என்று நினைத்தோம். என்னைப் பொறுத்தவரை நான் கோலிக்கு எதிராக பந்துவீசும் போது சிறப்பாக உணர்ந்தேன். அவருக்கு எதிராக நான் வேகமாக பந்து வீசி இருந்தால் என்னை அவர் அடித்திருப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : 28 ஆண்டுகள் கழித்து காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் ! இந்தியாவின் அட்டவணை இதோ

ஆனால் அவருக்கு எதிராக நான் எனது வெறியேஷன்களை காட்டினேன். அதன் காரணமாகவே இறுதியில் அவர் விக்கெட்டும் எனக்கு கிடைத்தது. இந்திய அணியில் நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகனும் கூட. எனக்கு விராத் கோலியை மிகவும் பிடிக்கும் இந்திய அணியின் முதுகெலும்பு அவர்தான் என ஷாஹீன் அப்ரிடி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement