24 ஆண்டுகள் கழித்து காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் ! இந்தியாவின் அட்டவணை இதோ

IND
- Advertisement -

ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிகராக உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்த வருடம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரும் ஜூலை மாதம் 29ஆம் தேதி துவங்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

womens

- Advertisement -

இந்த காமன்வெல்த் போட்டிகளில் 24 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ செய்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் வரும் காலங்களில் ஆடவர் கிரிக்கெட்டும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1998க்கு பின் முதல் முறையாக :
கடைசியாக கடந்த 1998ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஷான் பொல்லாக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது.

Sachin 1

இந்தியா உட்பட உலகின் டாப் கிரிக்கெட் அணிகள் பங்கு பெற்ற அந்த தொடரில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், இலங்கையின் ஜெயவர்த்தனே உள்ளிட்ட பல ஜாம்பவான் வீரர்கள் விளையாடி இருந்தார்கள்.

- Advertisement -

எத்தனை அணிகள் :
இந்த இந்த இத்தொடரில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பார்படாஸ் ஆகிய நாடுகள் 7 நாடுகள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டது. 8வது அணியாக தகுதி சுற்றின் வாயிலாக இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பார்படாஸ் ஆகிய 4 அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் குரூப் பி பிரிவில் உள்ளன.

womens ind

வரும் ஜூலை 29 அன்று துவங்கும் இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஆகஸ்டு 7ஆம் தேதி அன்று கிரிக்கெட் போட்டிகளுக்கான தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. கடைசியாக கடந்த 1998ம் ஆண்டு 50 ஓவர் போட்டிகளாக நடைபெற்ற கிரிக்கெட் தொடர் இந்த முறை 20 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது.

முழு அட்டவணை :
இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் ஜூலை 29ஆம் தேதி பலம் பொருந்திய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது. அதேபோல் ஜூலை 31ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்க உள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறி பின்னர் இறுதிப்போட்டியில் தங்கப்பதக்கத்துக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

காமன்வெல்த் போட்டிகள் 2022 – இந்தியாவின் முழு அட்டவணை இதோ:
ஜூலை 29, மாலை 4.30 மணி, இந்தியா V ஆஸ்திரேலியா, எட்ஜ்பஸ்டன்.
ஜூலை 31, மாலை 4.30 மணி, இந்தியா V பாகிஸ்தான், எட்ஜ்பஸ்டன்.
ஆகஸ்ட் 3, மாலை 4.30 மணி, இந்தியா V பார்படாஸ், எட்ஜ்பஸ்டன்.

Advertisement