IND vs PAK : ஆசியக்கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய நட்சத்திர வீரர் – பெரிய இழப்புதான்

INDvsPAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இன்னும் சில மாதங்களில் டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன்னதாக தற்போது அதற்கு தயாராகும் வகையில் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. ஆசிய கண்டத்தினை சேர்ந்த 6 அணிகள் மோதும் இந்த தொடரானது ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

Asia-Cup

- Advertisement -

15-வது முறையாக நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இம்முறை t20 உலக கோப்பை தயாராகும் வகையில் 20 ஓவர்களை கொண்ட போட்டியாகவே நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு இந்த ஆசிய கோப்பை தொடரில் கைப்பற்றி வெற்றியுடன் டி20 உலக கோப்பையை அணுக இந்திய அணி காத்திருக்கிறது.

அதேபோன்று இந்திய அணிக்கு சமமாக தயாராகி வரும் பாகிஸ்தான் அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த ஆசிய கோப்பையில் வெற்றி பெற்று அதே நம்பிக்கையுடன் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான சாஹின் அப்ரிடி விலகியுள்ளார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

Shaheen-afridi-1

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணியை எதிர்த்து மிக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாஹின் அப்ரிடி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து அவர் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதேவேளையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பலரும் நட்சத்திர வீரர்கள் என்பதனால் இந்திய அணிக்கு ஷாகின் அப்ரிடி அந்த அணியில் இல்லாததால் கூடுதல் சாதகத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : NED vs PAK : இவர போயா ரொனால்டோ, மெஸியுடன் ஒப்பிட்டீங்க – பாபர் அசாமை கலாக்கும் ரசிகர்கள், எதற்குனு பாருங்க

அதுபோக பாபர் அசாம், முகமத் ரிஸ்வான் போன்ற குறைவான உலகத்தரம் வாய்ந்த வீரர்களை மட்டுமே பாகிஸ்தான் அணியில் உள்ளனர். ஆனால் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா என கிட்டத்தட்ட அனைவருமே உலகத்தரம் வாய்ந்த பலமான தரமான வீரர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement