2017, 2021 உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் அடிவாங்கியும் இன்னும் முன்னேறல – இந்தியா மீது நாசர் ஹுசைன் விமர்சனம்

hussain
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்தியா 2014க்குப்பின் 8 வருடங்கள் கழித்து அங்கு கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டி ஜூலை 17இல் மான்செஸ்டரில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் 45.5 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 60 ரன்களும் ஜேசன் ராய் 41 ரன்களும் எடுத்தனர்.

IND vs ENG TEam INDIA

- Advertisement -

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் சஹால் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 260 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 1, ரோகித் சர்மா 15, விராட் கோலி 17, சூர்யகுமார் யாதவ் 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 72/4 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அதனால் தோல்வி உறுதியென கவலையடைந்த ரசிகர்களுக்கு 5-வது விக்கெட்டுக்கு நங்கூரமாகவும் அதிரடியாகவும் 133 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் – ஹர்திக் பாண்டியா ஜோடி இந்தியாவை தூக்கி நிறுத்தியது.

போராடி வெற்றி:
அதில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 71 (55) ரன்களில் வெற்றி உறுதி செய்து ஆட்டமிழக்க மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து 16 பவுண்டரி 2 சிக்சருடன் 125* (113) ரன்கள் குவித்து அபார பினிசிங் கொடுத்தார். அதனால் 42.1 ஓவரில் 261/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை முத்தமிட்டது. முன்னதாக இப்போட்டியில் பண்ட் – பாண்டியா மட்டும் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் போயிருந்தால் 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாச தோல்வியை சந்தித்தது போல் இந்தியா மண்ணைக் கவ்வியிருக்கும்.

Rishabh Pant Hardik Pandya

இதற்கு முக்கிய காரணம் இந்த 2 போட்டிகளிலுமே நியூசிலாந்தின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்ளி வீசிய அற்புதமான ஸ்விங் வேகப்பந்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான் போன்ற அனுபவம் வாய்ந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே காரணமாகும். ஆனால் வரலாற்றில் இது போல இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முக்கிய போட்டியில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறுவது புதிதல்ல என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

கொஞ்சமும் முன்னேறல:
துபாயில் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியிடம் ரோஹித் சர்மா 0, கேஎல் ராகுல் 3 என ஒற்றை இலக்க ரன்களில் சிக்கிய இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இறுதியில் வரலாற்று தோல்விக்கு முக்கிய பங்காற்றியதை சுட்டிக்காட்டி உண்மையான விமர்சனத்தை முன் வைத்துள்ள அவர் இது பற்றி போட்டி முடிந்ததும் பேசியது பின்வருமாறு.

hussain

“இந்தியா மிகவும் வலுவான அணி என்றாலும் கடந்த காலங்களில் சந்தித்த தோல்விகளில் இருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது. கடந்த 2021இல் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் பேட்டிங்கில் தடுமாறிய அவர்கள் இதை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். ஏனெனில் உங்களுக்கு மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருப்பதால் டாப் ஆர்டரில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தக் கூடாது”

- Advertisement -

shaheen afridi

“எனவே இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில் துபாயில் சாகித் அப்ரிடி எனும் ஒருவர் அவர்களை ஊதித்தள்ளியதாக வரலாறு கூறுகிறது. அதேபோல் இந்த போட்டியில் ரீஸ் டாப்ளி அவர்களை ஊதித் தள்ளினார்” என்று கூறினார்.

இதுபோக கடந்த 2017இல் இதே இங்கிலாந்து மண்ணில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர் வீசிய அற்புதமான பந்துகளில் ரோஹித் சர்மா 0, விராட் கோலி 5, ஷிகர் தவான் 21 என இதே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானது இறுதியில் இந்தியாவுக்கு 180 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை பரிசளித்ததுடன் கோப்பையையும் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தது.

Amir

இதையும் படிங்க:

அதையும் சுட்டிக்காட்டியுள்ள நாசர் ஹுசேன் வரும் காலங்களில் உலக கோப்பையில் அதுபோன்ற தடுமாற்றத்தை தவிர்க்க இதுபோன்ற இருதரப்பு தொடர்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு முன்னேற வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “2017இல் முகமது ஆமிரிடம் தடுமாறிய அவர்களது பேட்டிங் சுமாரான பார்மிலிருந்து விராட் கோலி திரும்பினால் சிறப்பாக அமையும். எனவே ஐசிசி உலகக் கோப்பைகளை விளையாட தயாராகியுள்ள அவர்கள் இந்த இருதரப்பு தொடர்களை போல அங்கேயும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement