- Advertisement -
இந்திய கிரிக்கெட்

79 ரன்ஸ்.. 22 வயதில் புதிய உலக சாதனை படைத்த ஷபாலி வெர்மா.. இலங்கைக்கு எதிராக வரலாற்று சாதனை

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை சொந்த மண்ணில் முதல் முறையாக வென்ற இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் எளிதாக வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 3வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரவு 7:00 மணிக்கு நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை மீண்டும் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 112/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 25, இமேஷா துலானி 27, கவிசா திலாரி 20 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

ஷபாலி அதிரடி:

இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா 4, ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு ஸ்ருத்தி மந்தனா 1, ஜெமிமா ரோகித்ரிகஸ் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் மறுபுறம் இலங்கையை வெளுத்து வாங்கிய ஷபாலி வெர்மா 24 பந்துகளில் அரை சதமடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

அவருடன் சேர்ந்து நிதானமாக விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 21* (18) ரன்கள் குவித்தார். மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷபாலி 11 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79* (42) ரன்களை 188.10 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஃபினிஷிங் செய்தார். அதனால் ஓவரிலேயே 115/2 ரன்கள் குவித்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

- Advertisement -

உலக சாதனை:

அதன் காரணமாக ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்று இலங்கையை தோற்கடித்துள்ளது. இப்போட்டியையும் சேர்த்து 21 வயதாகும் ஷபாலி வெர்மா 13வது முறையாக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 மகளிர் கிரிக்கெட்டில் 22 வயதுக்குள் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையை ஷபாலி படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 13.2 ஓவரில் 115 ரன்ஸ்.. உலக சாதனையை சமன் செய்த தீப்தி.. இலங்கையை வீழ்த்திய இந்திய மகளிரணி

இதற்கு முன் அமெரிக்காவின் தீர்த்தா சதீஷ் மற்றும் ஐஸ் ஆஃப் மேனின் லூசி பார்னட் ஆகிய வீராங்கனைகள் 22 வயதுக்குள் 12 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதுமட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீராங்கனையாகவும் ஷபாலி சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஷபாலி வெர்மா: 79*, திருவனந்தபுரம், 2025*
2. ஜெமிமா ரோட்ரிகஸ்: 76, சைல்ஹட், 2022
3. ஜெமிமா ரோட்ரிகஸ்: 69*, விசாகப்பட்டினம், 2025

- Advertisement -