- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மகளிர் ஆசிய கோப்பை : வெளுத்து வாங்கிய லேடி சேவாக், புதிய வரலாற்று உலக சாதனைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15ஆவது முறையாக கடந்த மாதம் துபாயில் நடைபெற்று முடிந்தது. அந்த நிலைமையில் மகளிர் ஆசிய கிரிக்கெட் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் வங்கதேசத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 6 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா லீக் சுற்றில் இலங்கை, மலேசியா, அமீரகம் ஆகிய அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்தாலும் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்றில் முதல் முறையாக தோற்றது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 8 ஆம் தேதியான நேற்று வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

சைலட் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159/5 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே 96 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்த நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 6 பவுண்டரியுடன் 47 (38) ரன்களில் ரன் அவுட்டாக மறுபுறம் வெளுத்து வாங்கிய ஷபாலி வர்மா அதிரடியாக 5 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (44) ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஷபாலி உலகசாதனை:
அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஸ் 4, நவ்கிரே 0, தீப்தி சர்மா 10 என மிடில் ஆர்டர் வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் 3வது இடத்தில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ஜெமிமா ரோட்ரிக்கஸ் 4 பவுண்டரியுடன் 35* (24) ரன்கள் குவித்து அசத்தினார். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ருமானா அகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய அந்த அணிக்கு பர்கானா ஹாக் 30 (40) காட்டுன் 21 (25) கேப்டன் சுல்தானா 36 (29) என டாப் 3 வீராங்கனைகள் போராடி நல்ல ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் அடுத்து வந்த வீராங்கனைகள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 100/7 ரன்கள் மட்டுமே எடுக்க அந்த அணி சொந்த மண்ணில் பரிதாபமாக தோற்றது. இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் அதிரடியாக 55 ரன்களும் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளையும் எடுதது அபராமாக செயல்பட்ட ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருதை வென்றார். கடந்த 2019ஆம் ஆண்டு 15 வயதில் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்யும் தொடக்க வீராங்கனையாக தன்னை அடையாளப்படுத்தி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

நாளடைவில் 3 வகையான அணியிலும் அறிமுகமான அவர் 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடிய இளம் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வரலாற்று சாதனையையும் ஏற்கனவே தகர்த்துள்ள அவர் 2020இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையில் அடுத்தடுத்த 2 ஆட்டநாயகி விருதுகளை வென்று அசத்தினார். இப்படி தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடியாக பேட்டிங் செய்து சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்று கொடுக்கும் அவரை ஏற்கனவே இந்திய ரசிகர்கள் லேடி சேவாக் என்று அழைத்து வருகிறார்கள்.

1. அந்த நிலையில் இப்போட்டியில் 55 ரன்கள் குவித்த அவர் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் 1000 ரன்களைக் குவித்த வீராங்கனை என்ற இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிகஸ் சாதனையை 18 வயதிலேயே தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஷபாலி வர்மா : 18 வருடம் 253 நாட்கள்*
2. ஜெமிமா ரோட்ரிகாஸ் : 21 வருடம் 32 நாட்கள்
3. கேரி லெவிஸ் : 21 வருடம் 68 நாட்கள்
4. ஸ்டாபானி டெய்லர் : 21 வருடம் 111 நாட்கள்

- Advertisement -

2. அத்துடன் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 1000 ரன்கள் குவித்த வீராங்கனை என்ற ஆஸ்திரேலியாவின் மெக் லென்னிங் சாதனையையும் தகர்த்து புதிய உலக சாதனையும் (735 பந்துகளில்) படைத்தார்.

இதையும் படிங்க : INDvsRSA : தமிழக வீரருக்கு இடம். அதோடு மேலும் ஒரு வீரர் அறிமுகம் – 2 ஆவது போட்டியின் பிளேயிங் லெவன்

3. அது போக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ரன்களில் 1000 ரன்களை அடித்த வீராங்கனை என்ற ஆஸ்திரேலியாவின் மெக் லென்னிங் சாதனையையும் தகர்த்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஷபாலி வர்மா : 3 வருடம் 14 நாட்களில்
2. மெக் லென்னிங் : 3 வருடம் 87 நாட்களில்

- Advertisement -
Published by