- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உலககோப்பை வரலாற்றில் வீரேந்தர் சேவாக்கின் மாபெரும் சாதனையை தகர்த்த ஷபாலி வர்மா – விவரம் இதோ

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக நவம்பர் 2-ஆம் தேதி டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய மகளிர் அணியானது 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. இந்திய மகளிர் அணி பெற்ற இந்த வெற்றி நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வைத்துள்ளது. அதோடு இந்திய மகளிர் அணிக்கும் வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.

சேவாக்கின் சாதனையை முறியடித்த ஷபாலி வர்மா :

அதன்படி நடைபெற்று முடிந்த அந்த மாபெரும் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை குவித்தது. பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய ஷபாலி வர்மா 78 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 87 ரன்கள் குவித்து அசத்தினார். அதோடு பந்துவீச்சிலும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் இந்த இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய ஷபாலி வர்மா இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக்கின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஷபாலி வர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் அவர் அடித்த அரைசதத்தின் மூலம் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர் அரைசதத்தை அடிக்கும் போது அவருடைய வயது : 21 வயது 278 நாட்களாகி இருந்தது.

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் சி.எஸ்.கே அணிக்கு போவார்னு நான் நினைக்கல.. காரணத்துடன் விளக்கிய – ஆகாஷ் சோப்ரா

இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் அரைசதம் அடித்தபோது 24 வயது 154 நாட்களில் இருந்தார். அதுவே மிக இளம் வயதில் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் அரைசதம் அடித்த இந்திய வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ஷபாலி வர்மா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -