சச்சினின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் வீராங்கனை – அப்படி என்ன சாதனை தெரியுமா ?

Shafali

இந்திய மகளிர் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Shafali 2

இந்தப் போட்டியில் இந்திய அணியின் 15 வயதான ஷபாலி வர்மா 73 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும் இதன்மூலம் அவர் சச்சினின் சாதனையை முறியடித்து ஒரு புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

அதன்படி இந்த போட்டியில் ஷபாலி வர்மா சர்வதேச போட்டிகளில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் அடித்த அரைசதம் 15 வயது 285 நாட்களில் இருக்கும்போது அவர் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயது 213 நாட்களில் தனது முதல் அரைசதத்தை டெஸ்ட் போட்டியில் பதிவு செய்தார்.

Shafali 1

சச்சினின் இந்த அரைசதமே இந்திய அணி சார்பாக மிக குறைந்த வயதில் அடிக்கப்பட்ட அரைசதம் ஆக இதுநாள்வரை இருந்திருந்தது. இதனை நேற்றைய போட்டியின் மூலம் ஷபாலி வர்மா முறியடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -