டி20 வேர்ல்டுகப் : இறுதிப்போட்டியில் அவங்க கூட விளையாடனும். அதுதான் என் ஆசை – ஷதாப் கான் விருப்பம்

Shadab-Khan
Advertisement

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணியுடன் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு இந்திய அணிக்கு எதிரான தோல்வியை விட ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோல்வி அடைந்து மோசமான நிலையை எட்டியது. ஒரு கட்டத்தில் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியதால் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அதிர்ஷ்டவசமாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Shadab Khan 1

இப்படி தங்களுக்கு கிடைத்த இந்த அரையிறுதி வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய பாகிஸ்தான் அணியானது சிட்னி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 13-ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

INDvsPAK

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் ஷதாப் கான் ஒரு ஆல்ரவுண்டராக அசத்தி வருகிறார். அதன்படி நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதி போட்டி முடிந்த பின்னர் அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் : இறுதி போட்டியில் எந்த அணியை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட ஆவலாக காத்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள விரும்புகிறேன். எப்பொழுதுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் எந்த அளவு பரபரப்பு இருக்கும் என்பது நாம் அறிந்ததே. எனவே அந்த வகையில் நான் இந்திய அணிக்கு எதிராகவே விளையாட விருப்பப்படுகிறேன் என ஷதாப் கான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவை தொடர்ந்து மேலும் ஒரு நட்சத்திர வீரர் வலைப்பயிற்சியின் போது காயம் – என்ன நடக்கப்போகுதோ?

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஒருஅரை சதம் மட்டுமின்றி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் ஃபீல்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். இப்படி ஒரு ஆல் ரவுண்டராக பாகிஸ்தானுக்கு அற்புதமாக செயல்பட்டு வரும் அவர் இறுதிப் போட்டியிலும் அந்த அணியின் வெற்றிக்கு கை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement