இனியும் அவரின் திறமையை வேஸ்ட் பண்ணாம இந்தியன் டீம்ல சேன்ஸ் கொடுங்க – வெங்சர்க்கார் ஆதரவு

Dilip
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 3 வெற்றிகளையும் தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் தவிக்கிறது. தற்போதைய நிலைமையில் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே காட்சியளிக்கிறது. இருப்பினும் எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாக வந்துள்ளது அந்த அணிக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

- Advertisement -

ஹைதெராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் திரும்பியதுமே பேட்டிங் பவுலிங் என அனைத்திலும் அசத்திய சென்னை 3-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. புனேவில் நடைபெற்ற அப்போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கி மார்கோ யான்சென், நடராஜன், உம்ரான் மாலிக் போன்ற தரமான பவுலர்களை கொண்ட அணியாக விளங்கும் ஹைதராபாத்தை முதல் ஓவரிலிருந்தே சொல்லி அடித்த ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஜோடி 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த சென்னை ஜோடி என்ற வரலாறு படைத்தது.

மிரட்டிய ருதுராஜ்:
அந்த ஜோடியில் ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்த இளம் தொடக்க வீரர் ருதுராஜ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 99 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் சென்னையின் 13 ரன்கள் வித்யாச வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதுபோல் சென்னை கடைசியாக பதிவு செய்த 17 வெற்றிகளில் 8 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள இவர் சமீப காலங்களில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். மேலும் அப்போட்டியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது மின்னல் வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் உம்ரான் மாலிக் வீசிய 145 – 150 கி.மீ வேகப்பந்துகளை அசால்டாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட அவர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

Ruturaj Kane Williamson

கடந்த வருடம் 635 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை 4-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய ருதுராஜ் இந்த வருடம் ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன்பின் மிகச் சிறப்பாக விளையாட தொடங்கியுள்ளார். அத்துடன் கடந்த சில வருடங்களாகவே விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் மழை பொழிந்து வரும் அவருக்கு இனியும் நேரத்தை வீணடிக்காமல் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் திலிப் வெங்சர்க்கார் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

வேஸ்ட் பண்ணாதீங்க:
கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டதால் ஷிகர் தவான் தலைமையில் கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலும் கடைசியுமாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் பெரிய வாய்ப்பை பெறாத நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்க இந்திய அணி நிர்வாகம் யோசித்தது.

Ruturaj

ஆனால் இனியும் யோசிக்கத் தேவையில்லை என்று கூறும் திலிப் வெங்சர்க்கார் அதற்கான காரணத்தைச் சுட்டிக்காட்டி பேசியது பின்வருமாறு. “இதற்கு முந்தைய போட்டிகளில் ஒருசில பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை உம்ரான் மாலிக் தெறிக்கவிட்டிருந்தார். ஆனால் இந்த போட்டியில் அவரை ருதுராஜ் முன்னும் பின்னும் சிறப்பாகக் கையாண்டார். அவரைப்போன்ற வேகமான பவுலர்கள் வீசும் ஷார்ட் பந்துகளை ருதுராஜ் விளையாடிய விதம் தேர்வு குழுவினரை மகிழ்ச்சியடைய செய்திருக்கும்.

- Advertisement -

பொதுவாக நிறைய இந்திய வீரர்கள் வேகம் மற்றும் பவுன்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். ஆனால் ருதுராஜ் ஷார்ட் பந்துகளை எளிதாக நின்று பறக்க விடுகிறார். எனவே இனியும் டெஸ்ட் அணியில் அவரை தேர்வு செய்யாமல் தேர்வுக் குழுவினர் நேரத்தை வீணடிக்கக் கூடாது” எனக்கூறினார்.

Ruturaj

அதிவேகமான பந்துகளை குறிப்பாக வெளிநாட்டு பவுலர்கள் வீசும் ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ள பெரும்பாலான இந்திய வீரர்கள் தடுமாறும் நிலையில் அதை அவர் எளிதாக அடிக்கும் திறமை பெற்றுள்ளதாக கூறும் வெங்சர்க்கார் இந்தியாவுக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ருத்ராஜ் கால் பதிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக தேர்வு குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உம்ரான் மாலிக் போன்ற பவுலரை அவர் எதிர்கொண்ட விதத்திலேயே அதற்கு தாம் தகுதியானவன் என்று அவர் நிரூபித்துள்ளதாகவும் திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அது (99 ரன்கள்) மேட்ச் வின்னிங் ரன்களாக வந்தது மகிழ்ச்சியாகும். அதேபோல் அதிக கடினமாகவும் இல்லாமல் தடுமாற்றமாகவும் இல்லாமல் அனைத்து ஷாட்களையும் அவர் கச்சிதமாக விளையாடினார். அவர் பேட்டை நேராக பிடித்து விளையாடுகிறார்.

இதையும் படிங்க : தெனாவட்டான முடிவினை கையில் எடுத்து போட்டியை கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா? – இதெல்லாம் தேவையா?

அவர் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் தன்னை நிரூபித்து விட்டதால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிகரமாக செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட தகுதியானவர்” என தெரிவித்தார்.

Advertisement